'முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகளைக் கொண்ட ஒருங்கிணைப்புப் பொறிமுறை' தேசிய ஷூரா சபையின் ஆலோசனை ஏகமனதாக நிறைவேற்றம்
(தகவலும் படமும் Inamullah Masihudeen)
அரசியல் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகளைக் கொண்ட ஒருங்கிணைப்புப் பொறிமுறை (ஆலோசனை சபை) ஒன்றை அமைக்க தேசிய ஷூரா சபை முனவைத்த ஆலோசனை முஸ்லிம் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களால் ஏகமனதாக வரவேற்கப்பட்டது.
நேற்று முன்தினம் வெள்ளி மாலை (06/02/2014) முஸ்லிம் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களை தேசிய ஷூரா சபை அழைத்து கலந்துரையாடல் ஒன்றை கொழும்பில் நடாத்தியது, புதிய அரசின் நூறு நாள் வேலைத்திட்டம் மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்தங்கள், தேர்தல் முறை மாற்றங்கள், மத உரிமைகள் மதிக்கப்படல், மீள் குடியேற்றம் ,காணிப்பிரச்சினை என பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயப்பட்டது.
தேசிய ஷூரா சபை தொடர்ந்தும் சுயாதீனமான சிவில் சமூக தலைமையாகவே செயற்படும் என்றும், முஸ்லிம் மற்றும் தேசிய அரசியல் தலைமைகளுடன் சுமுகமான உறவுகளை மேற்கொள்ளும் எனவும் அங்கு வலியுறுத்திக் கூறப்பட்டது.
இந்த சந்திப்பில் அமைச்சர்களான ரவூப் ஹகீம், ரிஷாட் பதியுத்தீன், ஹசன் அலி, முன்னாள் அமைச்சர் பௌஸி ஆகியோரும் பாராளுமன்ற உறுப்பினர்களான ஹுனைஸ் பாரூக், அஸ்லம், பைஸல் காஸிம் ஆகியோர் கலந்துகொண்டு கலந்துரையாடல்களில் ஆக்கபூர்வமாக பங்களிப்புச் செய்தனர். அமைச்சர்களான கபீர் ஹாஷிம், ஹலீம் உட்பட பலரும் தவிர்க்க முடியாத காரணங்களால் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமது அவர்களும் முஸ்லிம் காங்கிரஸ் பிரதி நிதிகளுடன் வருகை தந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment