Header Ads



அலரி மாளிகையிலிருந்து மஹிந்த ராஜபக்ஸ வெளியேற முன், அகற்றப்பட்ட hard drives கள்

அலரி மாளிகையில் இருந்த 120க்கும் மேற்பட்ட கணனிகள் வன் இயக்கிகள் (hard drives) காணாமல் போயுள்ளதாக தெரியவந்துள்ளது.

கடந்த மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு அலரி மாளிகையில் இயங்கிய விசேட பிரிவு ஒன்றில் இருந்து இந்த கணனிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

அந்த விசேட பிரிவில் 160 கணனிகள் இருந்ததுடன் அவற்றில் பெரும்பாலானவற்றில் வன் இயக்கிகள் இருக்கவில்லை.

மேற்படி விசேட கணனிப் பிரிவு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தேர்தல் நடவடிக்கைகளுக்கு பொறுப்பான முகாமையாளராக இருந்த முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவினால் ஏற்படுத்தப்பட்டிருந்தது.

160 கணனிகள் தேர்தல் தொகுதிகளுக்கு தனித்தனியாக பயன்படுத்தப்பட்டுள்ளன. தேர்தல் தொகுதிகளில் இருந்த இணைப்பாளர்கள் வழங்கும் தகவல்கள் மற்றும் விபரங்களுக்கான இந்த கணனிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தலைமையிலான நீலப் படையணியை சேர்ந்த பலர் இந்த பிரிவில் பணியாற்றி வந்தனர்.

வடக்கு, கிழக்கை தவிர நாட்டின் அனைத்து தேர்தல் தொகுதிகளும் உள்ளடங்கும் வகையில் தேர்தல் பிரசாரங்கள் தொடர்பான விடயங்கள் செயற்படுத்துவதற்காக இந்த கணனிப் பிரிவு அலுவலகம் அலரி மாளிகையில் இயங்கியுள்ளது. மகிந்த ராஜபக்ச சாதகமற்ற எதிர்க்கட்சிக்கு செல்வாக்குமிக்க தொகுதிகள் பற்றி அவர்கள் அறிந்திருந்தனர்.

தேர்தல் நடைபெற்ற தினத்திலும் இந்த கணனிப் பிரிவு முற்றாக இயங்கியதாக முன்னாள் அரசாங்கத்திற்கு நெருக்கமான வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

ஜனவரி 8ம் திகதி அதிகாலை முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ச அலரி மாளிகையில் இருந்து வெளியேறுவதற்கு முன்னர், கணனிகளில் இருந்த வன் இயக்கிகள் அகற்றப்பட்டிருப்பதாக தற்போதைய பிரதமர் அலுவலகத்தின் உயர்மட்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. Everyday lot of new stories only. NO any reactions.

    ReplyDelete

Powered by Blogger.