மஹிந்த ராஜபக்ஸவின், ஆதரவாளரான ரவூப் ஹக்கீம் ஒர் இனவாதி - தயா கமகே
அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஒர் இனவாதி என ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளரும், கிழக்கு மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவருமான தயா கமகே தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ஸவின் பாசறையிலிருந்து உருவான இனவாதியே ரவூப் ஹக்கீம் என அவர் தெரிவித்துள்ளார்.
மாகாணத்தில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிக்கொள்ள இனவாதத்தை தூண்டக் கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார். மஹிந்த ராஜபக்ஸவின் ஆதரவாளரே ரவூப் ஹக்கீம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மெய்யான நோக்கில் பொது வேட்பாளருக்கு ஹக்கீம் ஆதரவளிக்கவில்லை எனவும், அவ்வாறான ஓர் நிலையமையிலும் நகர அபிவிருத்தி மற்றும் நீர் விநியோக மற்றும் வடிகலமைப்பு அமைச்சு அவருக்கு வழங்கப்பட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய முதலமைச்சர் சஹிர் அஹமட் இரண்டரை ஆண்டுகளாக மாகாணசபையில் அங்கம் வகித்த போதிலும் மக்களுக்கு எவ்வித சேவையும் ஆற்றவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
சிங்கள ஒருவர் முதலமைச்சராக வரக்கூடாது என ஹக்கீம் குறிப்பிட்டுள்ளதாகத் தெரவித்துள்ளார்.
30 ஆண்டுகள் யுத்தம் காரணமாக நாடு பாரியளவு பிரச்சினைகளை எதிர்நோக்கியதாகவும், எதிர்காலத்தில் பிரிவிவினைவாதம் தலைதூக்குவதனை எவரும் விரும்பவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரவூப் ஹக்கீம் இனவாத நிலைப்பாட்டை கைவிட்டுச் செயற்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
Pls tell bbs as well
ReplyDeleteVery good comment.please change your policy mr hakeem
ReplyDeleteஇவரே இருக்கு முஸ்லிம்கள் மத்தியில் இருக்கும் செல்வாக்கை இல்லாமல் செய்யப் போகின்றார் இவருக்கு இவரது ஆசனத்தையே சனாதிபதித் தேர்தலில் வெல்ல முடியாமல் போய் விட்டது
ReplyDeleteVery good comment. Muslims hv to change their mind to support good thing or good people irrespective of religion.
ReplyDelete