இலங்கை பெண்கள் மத்திய கிழக்குநாடுகளுக்கு செல்வதை நான் விரும்பவில்லை - அமைச்சர் தலதா அதுகோரல
இலங்கை பெண்கள் மத்திய கிழக்குநாடுகளுக்கு அனுப்பி வைப்பதனை நான்
விரும்பவில்லை என வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் தலதா
அதுகோரல தெரிவித்துள்ளார்.
இதனை விடவும் சிறந்த தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொள்வதே எமது நோக்கமாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
பெண்கள் வெளிநாடு செல்வதனால் அவர்களது பிள்ளைகளுக்கு ஏற்படக் கூடிய
பிரச்சினைகள் குறித்து பெண் என்ற ரீதியில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது என
அவர் குறிப்பிட்டுள்ளார்.
நான் ஒர் பெண்ணாகவே இந்தப் பிரச்சினை பார்க்கின்றேன் எனவும் தாய்
இல்லாமல் பிள்ளைகளை வளர்ப்பது சமூகத்தில் பாரிய பிரச்சினையாக மாறியுள்ளது
எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஊடகங்கள் தம்மை பற்றி என்ன சொன்னாலும் மனச்சாட்சியின் அடிப்படையில் தாம் கடமையாற்றி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள மூன்று இலங்கையர்களை
பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
சவூதி மன்னருடன் தொடர்புகளைப் பேணி வரும் ரவூப் ஹக்கீமை குறித்த
நபர்களுக்கு மன்னிப்பு பெற்றுக்கொடுப்பதற்காக அனுப்பி வைத்துள்ளதாகவும்
அந்நாட்டு சட்டங்களின் அடிப்படையில் தாம் அங்கு சென்று இவ்வாறான
முயற்சியில் ஈடுபடுவதனை விடவும் அமைச்சர் ஹக்கீம் செல்வது பயனுள்ளதாக
அமையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Very good idea madam. Allah show Wright way if you be strong in this way.Allahumma barik.
ReplyDeleteSri Lanka government has to create job opportunities to our respected ladies in Sri Lanka with Good salaries for servival
ReplyDeleteSri Lanka government has to create job opportunities to our respected ladies in Sri Lanka with Good salaries for servival
ReplyDeleteYes great idea be a strong in this matter madam
ReplyDeleteMadam, I appreciate ur decision but how u will help poor lady and poor family
ReplyDelete