மாவீரன் சதாம் ஹுஸைனை தூக்கிலிட, பயன்படுத்திய கயிறு ஏலம் போகிறது
ஈராக் முன்னாள் மாவீரன் சதாம் ஹுஸைனை தூக்கலிடபயன்படுத்திய தூக்கு கயிறு 70 லட்சம்வரை ஏலம் விடப்பட உள்ளது.
ஈராக் முன்னாள் அதிபரும் ராணுவ மாவீரன்யுமான சதாம் உசேன் மீது கடந்த 1982-ம் ஆண்டு முதல் ஆட்சி காலத்தில் பலரை இனப்படுகொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது. தலைமறைவாக இருந்த சதாம் உசேன், அமெரிக்க, பிரிட்டன் கூட்டு படைகளால் கடந்த 2003-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.
கோர்ட்டில் நடந்த விசாரணையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. 2006-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பாக்தாத் சிறையில் தூக்கலிடப்பட்டார்.
இந்நிலையில் சதாமை தூக்கலிட பயன்படுத்தப்பட்ட தூக்கு கயிறு, கயிறு ஏலம் விடப்படதாகவும், இந்திய மதிப்பு ரூ. 70 லட்சம் வரை ஏலம் எடுக்க குவைத்தைச் சேர்ந்த இரு தொழிலதிபர்கள், இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த செல்வந்தர் ஆகியோர் முன் வந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
உலகெங்கும் பயங்கரவாதம் புரிந்து வரும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை ஒருகட்டத்தில் வன்மையாக எதிர்த்தவர்தான் சதாம். அதற்காக அவரை மாவீரர் என்பதெல்லாம் மிகையானது.
ReplyDeleteமாவீரர்கள் ஒருபோதும் தமது சொந்த இன, சொந்த நாட்டு மக்களை கொன்றொழிக்க மாட்டார்கள் அல்லவா?
சதாம் ஒருகாலத்தில் அமெரிக்காவின் கைப்பாவையாக இருந்து ஈரானுடன் யுத்தம் புரிந்து சக இஸ்லாமியர்களைக் கொன்றொழித்தவர்.
தவிர, சொந்த நாட்டினுள் வாழ்ந்த குர்திஷ் இன மக்களை விஷவாயு செலுத்தி ஈவிரக்கம் இல்லாமல் கொன்றொழித்தவர்.
ஒருபேச்சுக்கு, இவரை மாவீரர் என்றால், நமது திரு.மகிந்த ராஜபக்ஷவும் தானாகவே மாவீரர் ஆகிவிடுவார்.
பரவாயில்லையா..?
Sadam Hussein is Sahid. Last word also kalima. He is Rahmathullah Alaihh
ReplyDeleteJesliya, இங்கு அதுவல்ல விடயம். இவர் மா வீரர் என்பதற்கு காரணம், அவரைக்கண்டு அமெரிக்கா பயப்பட்டது. எங்கோ "வளைகுடா கழுகு" என்ற புனைப்பெயரால் அரபு உலகத்தில் அழைக்கப்பட்டவர் இவர். ஏதோ வளைகுடா நாடுகளில் ஆட்சியில் இருந்த அமெரிக்காவின் தலையாட்டிகளுக்கு தைரியம் கொடுத்து அமெரிக்காவை ஓரம் கட்டிவிடுவாரோ என்று கங்கணம் கட்டி செய்யப்பட நீண்டநாள் திட்டம்தான் இந்த மாவீரர் தூக்கிலிடப்பட்டது. இதுவெல்லாம் அடிமட்டத்தில் இருக்கும் நமக்கு தெளிவாகும்போது நமக்கென்று செய்ய எந்த திட்டமும் எஞ்சியிருக்காது. தயாராகுவோம் ஆகிரத் பயணத்துக்கு... (Hals)
ReplyDeleteமொஹமட் மற்றும் றிபாயா,
ReplyDeleteஏன் நீங்கள் எல்லாம் இப்படி இருக்கின்றீர்கள்..?
சதாம் ஒரு முஸ்லிம் என்பதற்காகவோ அல்லது இறக்கும் தறுவாயில் கலீமாவை உச்சரித்து விட்டார் என்பதற்காகவோ அவர் புரிந்த கொடூரக் கொலைகளும் துரோகங்களும் மன்னிக்கக் கூடியதாகிவிடுமா..?
ஒருவேளை, ஹிட்லரோ முசோலினியோ இறக்கும் தறுவாயில் கலிமாவை உச்சரித்திருந்தால் அவர்கள் புரிந்த பாதகங்கள் எல்லாம் மன்னிக்கப்பட்டு அவர்களையும் மாவீரர்களாக நீங்கள் கொண்டாடுவீர்களா..?
இதுவே நீங்கள், ஈராக்கிலுள்ள சதாமினால் கொலை செய்யப்பட்ட ஓர் அப்பாவிக் குடும்பத்தின் அங்கத்தவர்களில் ஒருவராகஇருந்திருந்தால் இதேபோல உங்களால் கூறியிருக்க முடியுமா?
அவரால் பாதிப்படைந்த ஒரு முழு இனமே ஈராக்கில் கண்ணீர்வடித்துக் கொண்டிருப்பதை உங்களுக்கு வசதியாக நீக்கம் செய்துவிட்டு, தனது வாழ்வின் ஒரு பாகத்தில் அமெரிக்காவை எதிர்த்தார் என்ற காரணத்திற்காக மட்டும் அவரை எல்லோரும் மாவீரர் என்று புகழ்வதை ஆதரித்துப்பேச உங்கள் மனசாட்சி எப்படி இடம் கொடுக்கின்றது...?
எனக்கு ஒன்றும் சதாமுடன் தனிப்பட்ட குடும்பத் தகராறோ காணிப் பிரச்சினையோ கிடையாது. ஆனால் பொதுவாழ்விலிருக்கும் ஒருவர் அவரது செய்கைகளின் உண்மையின் அடிப்படையில் வைத்து மட்டுமே கொண்டாடப்படவோ இகழப்படவோ வேண்டும் என்பதே எனது அவா.
அதுதானே நியாயமானதும் கூட.