நுகர்வோர் அதிகாரசபை தூங்கிக் கொண்டா இருக்கிறது..?
-எஸ்.ஆப்தீன்-
ஊழல் நிறைந்த ஆட்சியைத் தோற்கடித்து நல்லாட்சியை அமுலாக்கும் நோக்கில் இந்நாட்டின் தலைமையும் அரசாங்கமும் நகர்ந்து கொண்டிருக்கின்றபோதும், அதனடியாக மக்கள் நேரடி பயன்களை அனுபவிக்க வேண்டுமென்ற நோக்கில் முதற்கட்டமாக நிறைவேற்றப்பட்ட இடைக்கால வரவு செலவுத் திட்டத்தின் பயன்களை மக்களுக்கு வழங்காமல் இழுத்தடிப்பும் இருட்டடிப்பும் செய்யும்வகையில் சில கம்பனிகளும் விற்பனையாளர்களும் மனிதாபிமானத்திற்கு முரணாக செயற்பட்டுக்கொண்டிருக்கும் போது, அவர்கள் மீது எவ்வித உடனடி நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கின்ற நுகர்வோர்களின் நலனுக்காக மாத்திரம் செயற்படவேண்டிய இந்நாட்டின் நுகர்வோர் அதிகார சபையானது தூங்கிக் கொண்டா இருக்கிறது? என கேட்க வேண்டியுள்ளது.
அரசாங்கம் வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றும் போது, விலைகள் பொருட்களுக்கு அதிகரிக்கும் சூழ்நிலை ஏற்படும் நேரத்தில், தங்களது கையிருப்பிலுள்ள பொருட்களையும் கூட உடனடியாக விலையேற்றி விற்பனை செய்து மனிதாபிமானத்திற்கு முரணாக அதிகரித்த இலாபத்தைப் பெற முனைகின்ற விற்பனையாளர்கள், விலைகள் பொருட்களுக்கு குறைக்கின்ற நிலைமைகள் ஏற்படும் போது, அதன் உடனடிப் பயன்களை மக்களுக்கு வழங்காது பல்வேறு காரணங்களையும் கதைகளையும் மக்களுக்குக் கூறி காலம் கடத்துகின்ற மிக மோசமான வியாபாரக் கலாச்சாரத்திற்கு நல்லாட்சியை நோக்கி நகர்கின்ற இவ்வரசாங்கமானது முறையானதும் நிலையானதுமான நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும்.
வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டு சுமார் ஒரு மாதம் கடந்துள்ள நிலைமையிலும் கூட இன்னும் மக்கள் பூரணமாக அதன் பயனை அனுபவிக்கவில்லை.
குறிப்பாக, சீமெந்து போன்ற கட்டடப் பொருட்களினதும் தொலைபேசிச் சேவைகளுக்கான கட்டணங்களினதும் போக்குவரத்துக்கான கட்டணங்களினதும் தேணீர்ச் சாலைகளில் விற்பனையாகும் சிற்றுண்டிகளினதும் இன்னும் பல பொருட்களினதும் விலைகள் குறைப்புச் செய்யப்படாமல் வழமையான விலைகளுக்கே இன்னும் விற்பனையாகிக் கொண்டு வருவது கண்டனத்திற்குரிய செயற்பாடுகளாகும்.
நிறைவேற்றப்பட்ட இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில், சீமெந்து விற்பனையில் 10மூ விலை குறைப்புச் செய்யப்பட்டது. ஆனால், இன்னும் அதன் விலையில் மாற்றம் ஏற்படுத்தப்படவில்லை. அதற்கான காரணத்தை, ஆராய்ந்தால், கம்பனிகளில் இருப்புக்கள் அதிகமாக இருப்பதாகவும் அதனால் அது முடியும் வரையில் பழைய விலைக்கே விற்க்க வேண்டியுள்ளதாகவும் கதையளக்கின்றனர்.
அதேபோன்று சுமார் 25மூ வரிவிலக்குச் செய்யப்பட்ட கையடக்கத்தொலைபேசி தொடர்புகளினதும் இன்டர்நெட் தொடர்புகளினதும் கட்டணங்களும் இதுவரை குறைப்புச் செய்யப்பட்டு அதன் பயன்கள் மக்களைச் சென்றடையவில்லை. குறிப்பாக, நிறைவேற்றப்பட்ட பட்ஜட்டிற்கு முன்னர் டயலொக், 550 ஆடி 10 19 வினாடி தொடர்பு கொள்ளலும் 10 100 குறுஞ் செய்திகளும் டயலொக்கிற்குள் இலவசமாக வழங்கப்படும். ஆனால், தற்போதும் எவ்விதமான மாற்றமுமின்றி அதே அளவே வழங்கப்படுகின்றது.
இதுபற்றி, டயலொக் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை முகவரைத் தொடர்பு கொண்டபோது, இதுபற்றி எமக்கு தெரியாது எனவும், அவ்வாறான சலுகைகளை வழங்குமாறு இதுவரை எமக்கு தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தல்கள் ஆணைக்குழுவிடமிருந்து எவ்வித அறிவுறுத்தல்களும் கிடைக்கப்பெறவில்லை எனவும் குறிப்பிடுகின்றனர்.
அதேபோன்று, எரிபொருளுக்கான கட்டணங்கள் குறைப்புச்செய்யப்பட்டது. ஆனால், மக்களால் நாளாந்தம் பயன்படுத்தப்படும் திரிவீலர்களுக்கான போக்குவரத்துக் கட்டணங்களும், நாளாந்தம் பொருட்களை ஏற்றி இறக்குவதற்காகப் பயன்படுத்தப்படும் ரெக்டர்களுக்கான இழுவைக்கட்டணங்களும், மற்றும் வேளாண்மை அறுவடை செய்யும் இயந்திரங்களுக்கான கட்டணங்களும் இவைபோன்ற சேவைகளை வழங்கும் சாதனங்களின் கட்டணங்களிலும் இன்னும் எவ்வித மாற்றமுமில்லை. இதற்கு முறையான நடவடிக்கை அவசியமாகும். அதாவது, ஒரு கிலோமீற்றருக்கு சாதாரனமாக இவ்வளவுதான் என்ற வெளிப்படையான அளவு நிர்ணயம் செய்யப்படல் வேண்டும்.
அதேபோன்று, எரிவாயுக்கான கட்டணமும் கோதுமை மாவுக்கான கட்டணமும் வரவுசெலவுத் திட்டத்தில் குறைப்புச் செய்யப்பட்டது. ஆனால், எமது பகுதிகளிலுள்ள தேணீர்க்கடைகளிலும் சிற்றுண்டிச் சாலைகளிலும் விற்பனையாகும் றொட்டி, பறாட்டா, கொத்து போன்ற தீன்பண்டங்களின் விலைகள் இன்னும் குறைக்கப்படவில்லை.
இவ்வாறான விடயங்களில் பொதுமக்களுக்கான பயன்கள் இன்னும் கிடைக்கப்பெறவில்லை என்றால், அதற்கான தடைகளை ஏற்படுத்துவோர் மீது இன்னும் முறையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால், மக்கள் அரசாங்கத்தின் மீதே குறைகூறுவர், ஆத்திரமடைவர். இதுபற்றி உரியவர்கள் உடனுக்குடன் நடவடிக்கை எடுப்பார்களா?

Post a Comment