Header Ads



மஹிந்த பாராளுமன்றம் வருவதை தடுத்தார் மைத்திரி - போட்டுடைத்தார் சஜித்

எதிர்க்கட்சித் தலைவராக நிமல் சிறிபால.டி. சில்வாவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்திருக்காவிட்டால், தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை இராஜினாமாச் செய்யவைத்து அதனூடாக பாராளுமன்றம் வந்து எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பெற்றுக்கொள்ள மஹிந்த ராஜபக்ஷ முயற்சித்திருப்பார் என அமைச்சர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

தேர்தலுக்குப் பின்னரான வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் எதிர்க்கட்சி கொண்டுவந்த சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

தேர்தல் காலத்தில் ரி56 துப்பாக்கி கலாசாரத்தை கடைப்பிடித்தவர்கள் தற்பொழுது தேர்தலுக்குப் பின்னரான வன்முறைகள் குறித்து பேசுவது நகைப்புக்கிடமானது. தேர்தல் காலத்தில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களுக்கு நீலப்படையணிக்குத் தலைமை தாங்கியவரே பொறுப்புக்கூற வேண்டும். குறிப்பாக ஹம்பாந்தோட்டையில் தேர்தலுக்குப் பின்னரான வன்முறை இடம்பெற்றதாக எதிர்க்கட்சித் தலைவர் கூறிய கருத்து முழுப் பொய்யானது.

ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற வன்முறைகளுக்கு நீல படையணிக்குத் தலைமைதாங்கியவரே காரணம். ஹம் பாந்தோட்டையில் எமக்கு கூட்டமொன்றை நடத்த முடியாது.

கூட்டம் நடத்தும் இடத்துக்கு வந்து வாகனத்தைநோக்கி வெடிவைத்து அச்சுறுத்திச் சென்றனர். ஆனால் தேர்தலின் பின்னர் முன்னாள் ஜனாதிபதியின் ஹம்பாந்தோட்டை வீடு, நீலப்படை யணியின் அலுவலகம், சபா நாயகரின் அலுவலகம், மஹிந்த அமர வீரவின் வீடு உள்ளிட்ட அனைத்துக்கும் பொலிஸ் பாதுகாப்பை வழங்கினோம். ஆனால் தேர்தல் காலத்தில் எனது வீட்டுக்குப் பாதுகாப்பு வழங்குமாறு கோரியபோதும் முன்னாள் ஆட்சியாளர்கள் அதனை வழங்கவில்லை. இதுவே நாட்டில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் மாற்றமாகும் என அவர் கூறினார்.

1 comment:

Powered by Blogger.