Header Ads



இலங்கையர்களை மரண தண்டனையிலிருந்து மீட்க, சவூதி அரேபிய மன்னர் குடும்பத்தை சந்திப்பார் ஹக்கீம்

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள மூன்று இலங்கையரையும் மீட்கும் நோக்குடன் ஜனாதிபதியின் விசேட தூதுவராக அமைச்சர் ரவூப் ஹக்கீம் நாளை சவூதி அரேபியா செல்லவுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் விசேட கடிதமொன்றுடன் அமைச்சர் ரவூப் ஹக்கீம் சவூதி செல்லவுள்ளார். மரண தண்டனை பெற்றுள்ள இலங்கையரை மீட்கும் நடவடிக்கையில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரள தாம் பதவியேற்ற அன்றே முஸ்லிம் அமைச்சர் ஒருவரின் உதவி பெறப்படும் என்றும் கூறியிருந்தார்.

இதன்படி அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கு அமைச்சர் தலதா அழைப்பு விடுத்திருந்தார். அத்துடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்தும் கடிதம் ஒன்றையும் கோரி இருந்தார்.

இக்கடிதத்துடன் இலங்கை ஜனாதி பதியின் விசேட தூதுவராக சவூதி மன்னர் குடும்பத்தை அமைச்சர் ஹக்கீம் சந்திக்கவுள்ளார். யேமன் நாட்டவரிடம் கொள்ளையிட்டது மட்டுமன்றி அவரை கொலைசெய்த குற்றச்சாட்டின் பேரில் இலங்கையர் மூவருக்கு சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தண்டனை பெற்றுள்ள மேற்படி இலங்கையரை தண்டனையிலிருந்து மீட்பதற்காக அமைச்சர் தலதா அத்துகோரள நடவடிக்கை எடுத்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சவூதி அரேபியாவில் தற்போதுள்ள சட்டங்களுக்கு அமைய மரண தண்டனைக்கு பதிலாக நிவாரணம் ஒன்றை பெற்றுக் கொள்ளும் நோக்குடனேயே இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

3 comments:

  1. அஸ்ஸலாம் அலைகும்
    ரவூப் ஹகீமை தெரிந்தவர்களுக்கு இத்தகவலை எத்திவைப்பது கடமை
    மரண தண்டனை கொலைக்காக மாத்திரம் விதிக்கப்பட்டால் தான் கொலை செய்யப்பட்டவரிடம் மன்னிப்புக் கோரி கொலைக்கு பதிலாக பணம் அல்லது அல்லாஹ்வுக்காக பணம் இன்றி அவர்கள் மன்னிக்கப்படலாம் இதற்காக பரிந்துரை செய்வது மிகப் பெரிய நற்காரியம்
    ஆனால் கொலையுடன் கொல்லையும் சம்பந்தப்பட்டால் அதற்கு ஹிராபா என்பார்கள் அதற்கு கொலை செய்யப்பட்டவரின் குடும்பம் கூட மன்னிக்க முடியாது இதற்காக பரிந்து பேசுவது கூட பாவமான காரியம் காரணம் இது கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்துடன் மாத்திரம் சம்பந்தப்பட வில்லை மாறாக மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாதகமாக உள்ளது
    இவர் போகும் வேளை எடுபடாது
    அரசியல் நோக்கமாக இருந்தாலும் மார்கம் தான் எமக்கு முதல் இவர் சென்றும் மன்னிப்பு கிடைக்கவில்லை என்றால் சவ்தி அரசாங்கத்தை விட மார்கம் இஸ்லாம் நிந்திக்கப்படலாம்

    ReplyDelete
  2. கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்தினருடன் பேசி அவர்கள் கேட்கும் தொகையை வழங்கினால் மாத்திரமே இவர்களைத் தப்பிப்பதற்கான ஒரே வழி. அதுவும் அவர்கள் அதற்கு இணங்க வேண்டும். அவ்வாறின்றி எமது நாட்டு ஜனாதிபதியே சென்றாலும் பயனற்றது. சொந்த நாட்டு மக்களின் தலைகளே அடிக்கடி வெட்டப்படுவதை யார் தான் அறியமாட்டார்கள்.

    ReplyDelete
  3. Can he change the Sharia Law ????? why you all highly elaborate the minister ???

    ReplyDelete

Powered by Blogger.