டுபாய் மற்றுமொரு, சாதனையை நிலைநாட்டியது
அதிநவீன கட்டிடம், பசுமையான சுற்றுப்புறம், சுகாதாரமான மற்றும் பாதுகாப்பான வளாகம் என பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ள துபாய் சர்வதேச விமான நிலையம் உலகின் சிறந்த விமான நிலையமானது. கடந்த (2014) ஆண்டில் சுமார் 7 கோடியே 4 லட்சம் பயணிகள் வந்து சென்றதன் மூலம் உலகின் பரபரப்பான விமான நிலையம் என்ற சிறப்பை இதுவரை தக்கவைத்திருந்த லண்டன் ஹீத்ரு விமான நிலையத்தை பின்னுக்குத் தள்ளி தற்போது முதல் இடத்தை பிடித்துள்ளது.
லண்டன் ஹீத்ரு விமான நிலையத்தின் வழியாக சுமார் 6 கோடியே 81 லட்சம் பயணிகள் மட்டுமே வந்து சென்றுள்ளனர். துபாய் சர்வதேச விமான நிலையத்தில் இந்த வளர்ச்சி கடந்த (2013) ஆண்டைவிட 6.1 சதவீதம் அதிகம். இந்த ஆண்டு சுமார் 7 கோடியே 90 லட்சம் பயணிகள் துபாய் விமான நிலையத்தை பயன்படுத்தக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்காலத்தில் இந்த எண்ணிக்கை 9 கோடியை தொடலாம் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Post a Comment