Header Ads



ரவூப் ஹக்கீமுக்கு எதிரான ஹர்த்தால், நிராகரிக்கப்பட வேண்டும்..!

-நவாஸ் சௌபி-
நாளை 26.02.2015 வியாழக்கிழமை அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்களால் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு எதிராக பூரண ஹர்த்தாலுக்கான அழைப்பு விடுக்கப்பட்ட துண்டுபிரசுரம் ஒன்று அம்பாறை மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சிரேஷ்ட போராளிகள் ஒன்றியத்தினால் வெளியிடப்பட்டிருக்கின்றது.

அம்பாறை மாவட்டத்தை மட்டும் மையமாகக் கொண்டு இந்த ஹர்த்தால் ஏற்பாடு செய்யப்படுவதில் உள்ள பின்னணி என்னவாக இருக்கும் என்பதில். கடந்த ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் ஏற்பட்ட மைத்திரபால சிறிசேனாவின் ஆட்சியில் அமைச்சரவைப் பங்கீடும் கிழக்கு மாகாணசபையில் முதலமைச்சர் நியமனமும் அம்பாறை மாவட்டத்தை முழுமையான வகையில் திருப்திப்படுத்தவில்லை என்ற காரணம் முதன்மை பெறுகிறதா?

ஆனாலும் கட்சிக்கு கிடைத்த ஒரு இராஜாங்க அமைச்சு கட்சியின் செயலாளர் நாயகத்திற்கு அம்பாறை மாவட்டத்தை மையமாக வைத்து வழங்கப்பட்டுள்ளதுடன் கிழக்கு மாகாண சபையில் இன்னுமொரு அமைச்சு கிடைப்பதாகவும் அது முன்னாள் சுகாதார அமைச்சர் மன்சூர் அவர்களுக்கே வழங்கப்பட இருப்பதாகவும் முடிவுகள் உள்ள நிலையில், முஸ்லிம் காங்கிரஸின் பதவிப் பங்கீடுகளில் அம்பாறை மாவட்டம் இன்னும் எதை மேலதிகமாக எதிர்பார்க்கிறது. அல்லது இப்பதவிகளை யாருக்காக எதிர்பார்க்கிறது? என்ற கேள்விகள் எழுகின்றன.

இது இவ்வாறு இருக்க முதலில் அம்பாறை மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சிரேஷ்ட போராளிகள் ஒன்றியம் என்பது இப்போது தலைவர் ஹக்கீமுக்கு எதிராக உருவான அமைப்பா? அல்லது முஸ்லிம் காங்கிரஸுக்கு எதிராக உருவான அமைப்பா? அல்லது கட்சியினுள் பாதிக்கப்பட்டு இருக்கின்றவர்கள் மறைமுகமாக இயங்குவதற்கான ஒரு பெயரா? அல்லது முஸ்லிம் காங்கிரஸ் மீதான மக்கள் ஆதரவை இல்லாது செய்வதற்கு ஏனைய கட்சி ஆதரவாளர்கள் கூட்டிய ஒரு அமைப்பா? என்ற சந்தேகங்கள் வலுவாக எழுகின்றன.

இந்தக் கேள்விகளுக்கான விடையில்தால் நாளைய ஹர்த்தாலின் நோக்கமும் அதற்கான நியாயமும் இருக்கிறது. தங்களது சுயநலரீதியான பதவிகளுக்கும் அல்லது கட்சிசார்ந்த அரசியலுக்கும் அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்களை ஒரு கேடயமாக ஆக்கி இந்த ஹர்த்தால் ஏற்பாடு செய்யப்படுவதை எப்படி நோக்குவது? இதனை மக்கள் அனுமதிப்பதற்கு இவ் ஹர்த்தால் மக்களின் உரிமை சார்ந்தோ அல்லது மக்களின் வாழ்வியல் பிரச்சினை சாhந்தோ ஏற்பாடு செய்யப்படவில்லை என்பது துண்டுபிரசுரத்தைப் படித்தால் நன்கு தெரிகிறது.

இதுவரையான முஸ்லிம் காங்கிரஸின் அரசியலில் 2002 இல் ஏற்பட்ட மூதூர் வெளியேற்றம் மற்றும் 2014 இல் ஏற்பட்ட அளுத்கம பிரச்சினைகளின் போதும் மஹிந்தவின் ஆட்சியிலிருந்து ஹக்கீம் விலகிவிடாது இருந்த போதும் இவ்வாறான ஒரு எதிர்ப்பு ஹர்த்தாலே ஹக்கீமுக்கு எதிராக செய்யாதிருந்த மக்கள் இப்போது எதற்காக இந்த ஹர்த்தாலே ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அத்துடன் கட்சியின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள் என்று அனைவரும் கட்சியுடன் இருக்கத் தக்கதாக மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை தலைவர் ஹக்கீமுக்காக செய்வதால் எந்தப் பயனும் கிடைக்கப் போவதில்லை. அம்பாறை மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் காங்கிரஸின் அனைத்துப் பிரதிநிதிகளையும் முதலில் தலைவரைவிட்டும் கட்சியை விட்டும் வெளியில் வரவைத்துவிட்டு அதன் பிறகு இவ்வாறான ஒரு ஹர்த்தாலை அல்லது எதிர்ப்பை காட்டுவதில் ஏதாவது ஒரு நியாயமிருக்கும். மாறாக அவர்கள் அனைவரும் கட்சியில் இருக்கத்தக்கதாக முகம் தெரியாத அம்பாறை மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சிரேஷ்ட போராளிகள் ஒன்றியத்தின் பின்னால் மக்கள் எப்படி நிற்பது எதற்காக நிற்பது.

இப்படித்தான் சாய்ந்தமருது மக்களும் தலைவர் ஹக்கீமை கொடும்பாவியாக காட்டி யாருக்காக ஆர்ப்பாட்டம் செய்தார்களோ அவர் இன்னும் அந்த கட்சியில் இருந்துவருவதோடு குறிப்பிட்ட சம்பவத்தை தனக்கு எதிரான தீய சக்திகளின் வேலை என்று அறிக்கையும் விட்டிருந்தார். அது ஒருவேளை உண்மையாகவும் இருக்கலாம். ஆனால் இதிலுள்ள ஒரு படிப்பினை என்னவென்றால் நாங்கள் யாருக்காக ஆர்ப்பாட்டம் ஹர்த்தால் செய்கின்றோமோ அத்தகையோர் கட்சியை விட்டு விலகாமல் கட்சிக்குள் இருக்கத்தக்கதாக நாம் அதனை செய்வது பயனற்ற செயல் என்பதாகும்.

இப்போதும், நாளை நடைபெறுவதாக இருக்கின்ற ஹர்த்தால் அழைப்புத் தொடர்பாக இக்கட்டுரை எழுதும்வரை பகிரங்க மறுப்பு அறிக்கை எதனையும் அம்பாறை மாவட்ட முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் பிரதிநிதிகள் யாரும் விடுத்ததாகத் தெரியவில்லை. அவ்வாறே இருந்துவிட்டு இறுதியில் எல்லாம் முடிந்த பிறகு இந்த ஹர்த்தாலுக்கும் எங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று    அறிக்கை விடுவதாகவும் அவர்கள் இருக்கலாம்.

அப்படிச் செய்வதால் அதன் உண்மையை அவர்கள் நிறுபிக்க முடிந்தாலும் இந்த ஹர்த்தால் நடைபெறுவதற்கு முன்பே அவர்கள் தடுக்க வேண்டும். அதன் உண்மையான செயற்பாடுகள் என்ன என்று வெளிக்காட்ட வேண்டும். இதனை இவ்வாறு வெளிக்காட்டாமல் தங்களுக்கு எதிராக சதி நடந்துவிட்டது என்று தப்பித்துக்கொள்வது நியாயமான காரணமாகாது.

ஏனென்றால் நாளை ஒரு தேர்தல் வருகின்ற போது அல்லது மக்கள் தேவை எழுகின்ற போது அம்பாறை மாவட்டத்திற்கு தலைவர் ஹக்கீமை அழைத்துவரவேண்டிய தேவை இருக்கிறது. இந்த ஹர்த்தாலுடன் ஹக்கீமை முஸ்லிம் காங்கிரஸின் தலைமையிலிருந்து முற்றாக ஒதுக்கிவிட முடியாது. ஊர் ஊராக அவரை மேடைபோட்டு பிரச்சாரம் செய்யும் தேவை மிக விரைவில் வருகின்ற பாராளுமன்றத் தேர்தலின் போது ஏற்படலாம். அப்போது இந்த மக்களின் முன்பு எப்படி ஹக்கீமை கொண்டுவர முடியும்? என்ற நியாயத்திற்கு என்ன பதில் சொல்வது?

எனவேதான் அம்பாறை மாவட்டத்தில் அத்தனை உறுப்பினர்களும் கட்சியின் பின்னாலும் தலைவரின் பின்னாலும்  இருக்கின்ற நிலையில் இந்த ஹர்த்தால் மக்களை பகடைக் காய்களாக்குகின்ற ஒரு செயலாகவே மாறும். 

இப்படியான ஒரு ஹர்த்தால் நடைபெற வேண்டுமாக இருந்தால் அம்பாறை மாவட்டத்திலுள்ள கட்சியின் அரசியல் பிரமுகர்கள் அனைவரும் முதலில் கட்சியை விட்டு வெளியில்வந்து அவர்களாக முன்நின்று இந்த ஹர்த்தாலே நடத்த வேண்டும் அல்லது அவர்கள் இதற்கு எதிராக முன்நின்று இந்த ஹர்த்தாலே தடுக்க வேண்டும் இது இரண்டும் இல்லாமல் இடையில் அம்பாறை மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சிரேஷ்ட போராளிகள் ஒன்றியம் இதை செய்கிறது என்றால் முதலில் அவர்கள் தங்களை மக்கள் அரங்கிற்கு முகம் காட்ட வேண்டும்.

இவை எதுவுமே இல்லாத நிலையில் நடைபெறும் ஹக்கீமுக்கு எதிரான ஹர்த்தாலை மக்கள் நிராகரிக்க வேண்டும். 

3 comments:

  1. Engaludaiya arasial wathikal Pathvikalukkum, panathukkum mattrum puhalkalukkum asai padukirawanukal ivanukalai innum nampa vental, eppa muslim samukathukku oru nalla katchi wara pokuthu, alukkana muslim thalaiwarkal

    ReplyDelete
  2. It is the time of the hour to convene Harthal against Wholesale Trader Hakeem, in previous regime it was unable as Hakeem was a tail of Mahinda.

    ReplyDelete
  3. Pls, Name the other leader for SLMC ? This was TOPLESS , Harthaal

    ReplyDelete

Powered by Blogger.