சீனாவில் மனித முகத்துடன், பிறந்த பன்றிக்குட்டி
சீனாவின் நன்னிங் நகரத்தில் உள்ள யனான் நகர்ப்புறத்தில் பன்றிப் பண்ணை வைத்திருப்பவர் டாலு (வயது 40).
அவரது பண்ணையில் வளர்ந்து வரும் இனக்கலப்பு செய்யப்பட்ட ஒரு பன்றி சில தினங்களுக்கு முன் ஒரே ஈற்றில் 19 குட்டிகளைப் போட்டது. அவற்றைப் பார்வையிட்ட டாலு, கடைசியாகப் பிறந்த குட்டி இதர குட்டிகளைவிட பெரிய அளவில் இருந்ததால் ஆச்சர்யத்தில் மூழ்கினார்.
அதை கையில் எடுத்துப் பார்த்தபோது அந்தக் குட்டிக்கு மனிதனின் முகமும், நெற்றிப்பகுதியில் ஆண்குறியும் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
இந்த விஷயத்தை அவர் தனது நண்பர்களிடம் சொல்ல, அவர்களும் உடனடியாக பண்ணைக்கு வந்து அந்த அதிசய பன்றிக்குட்டியைப் பார்வையிட்டு ஆச்சர்யமடைந்தனர். சில தினங்களுக்குள் இது தொடர்பான செய்தி நன்னிங் நகரம் முழுவதும் பரவியது.
இதையறிந்த ஒரு சீன நாளிதழ் அந்தக் குட்டிப் பன்றியின் புகைப்படத்தோடு சிறப்பு செய்திக் கட்டுரை வெளியிட்டது. அந்த செய்தி நாடு முழுவதும் காட்டுத்தீயாகப் பரவியது. இதில் பூரிப்படைந்த டாலு அந்த அதிசயக் குட்டியை பண்ணைக்குள் காட்சிப் பொருளாக வைத்து, பார்வையாளர்களிடம் கட்டணம் வசூலித்து குறுகிய காலத்தில் கோடீஸ்வரனாகிவிடலாம் என எண்ணினார்.
இதற்கிடையே, தூங்கக் கூட நேரமில்லாமல் டாலுவுக்கு தொடர்ந்து போன் கால்கள் வந்து கொண்டே இருந்தது. அந்தக் குட்டிப்பன்றியை வாங்குவதற்காக பெரிய போட்டியே நடந்தது. அந்தக் குட்டி எனக்கு வேண்டும் உங்களுக்கு எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறேன் என அவருக்கு ஏற்கனவே அறிமுகமானவர்களும், அறிமுகமில்லதவர்களும் வலை வீசத் தொடங்கினர்.
இரண்டு தலைமுறைக்கு பன்றிப்பண்ணையைப் பராமரித்தால் எவ்வளவு வருமானம் கிடைக்குமோ..? அதைவிட இரட்டிப்பு விலைக்கு அந்தக் குட்டியை வாங்கிக் கொள்ள பலர் தயாராக இருந்தனர். இதனால் தனது குடும்பத்திற்கு வாழ்நாள் முழுவதற்கும் போதுமான பணம் கிடைக்கும் என்பதால் அந்தக் குட்டியை காட்சிக்கு வைத்து பணம் சம்பாதிக்கும் முடிவை டாலு கை விட்டார்.
ஆனால், அவர்த மதி ஒன்றை நினைக்க, விதி வேறு வடிவில் வந்தது. எதிர்பராதவிதமாக அந்தக் குட்டியை தாய் பன்றி சேர்த்துக் கொள்ள மறுத்துவிட்டது. அதற்கு தாய்ப்பால் கொடுக்கவும் முரண்டு பிடித்தது. இதர குட்டிகளைப் போலன்றி மனித சாயலில் அதன் முகம் இருப்பதால் தாய் பன்றி அதை ஒதுக்கித் தள்ளுவதையறிந்த டாலு கொடுத்த புட்டிப்பாலையும் அந்த குட்டி குடிக்க மறுத்துவிட்டது. இதனால், சில நாட்களில் அது பரிதாபமாக உயிரிழந்தது.
Post a Comment