மஹிந்த வேண்டுமென்று எழுந்த சூடான மக்கள் எழுச்சிக்கு, ஐஸ் பக்கட்டினால் தாக்குதல்
பாராளுமன்றத்திலுள்ள பிரதான இரு கட்சிகளும் இணைந்து அரசாங்கம் அமைத்தால், பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக தலைதூக்குவது தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆகும் என மேல் மாகாண சபை உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
மஹிந்த வேண்டும் என்று எழுந்த சூடான மக்கள் எழுச்சிக்கு ஐஸ் பக்கட்டினால் மேற்கொள்ளும் ஒரு தாக்குதலாகத் தான் இந்த தேசிய அரசாங்கம் எனும் எண்ணக் கருவைப் பார்க்கின்றோம்.
இந்த தேசிய அரசாங்கத்தினால் நாட்டுக்கு பாரிய அச்சுறுத்தல்கள் காணப்படுவதாக மேல் மாகாண சபை உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
இந்த தேசிய அரசாங்கம் எனும் யோசனையினால் மக்களுக்கு அரசாங்கம் அழிவை ஏற்படுத்துகின்றனர்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்துடன் இணைந்து கொண்டு அதிலுள்ளவர்களுக்கு சலுகைகளை வழங்கி, அரசாங்கம் செய்யும் தவறுகளை மறைக்க மேற்கொள்ளும் முயற்சியே இதுவாகும்.
அத்து்ன், பிரதான இரு கட்சிகளும் இணைந்து அரசாங்கம் அமைத்தால், பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக தலைதூக்குவது தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆகும் எனவும் அவர் தெரிவித்தார்.
அதனால உமக்கு என்ன பிரச்சினை ?
ReplyDelete