Header Ads



மைத்திரி + ரணில் அரசாங்கம் தடுமாறுகிறது - போட்டுடைக்கிறார் அமைச்சர் (வீடியோ)

ஊழலுடன் தொடர்புடையவர்களுக்கு தண்டனை வழங்குவதற்கு தாமதம் நிலவுகின்றமை குறித்துஅமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று 26-02-2015 கேள்வி எழுப்பிய போது,


https://www.youtube.com/watch?v=VK1rFqaO0I4

அமைச்சர் சம்பிக்க ரணவக்க, ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க மற்றும் ஜனநாயக்க கட்சியின் தலைவர் ஜெனரல் சரத் பொன்சேகா ஆகியோர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மீது குறை கூறியுள்ளனர்.
பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்திய மிதக்கும் ஆயுத களஞ்சியத்தின் நடத்திய வந்த எவண் காட் தனியார் பாதுகாப்பு நிறுவனத்தின் உரிமையாளர் நிஸ்சங்க சேனாதிபதி வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கப்பட்டமை தொடர்பில் குறை கூறியுள்ளனர்.

அண்மையில் நடைபெற்ற தேசிய நிறைவேற்றுச் சபைக் கூட்டத்தில் இது குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

ஊழல் விசாரணை பணியகத்தின் ஆலோசகர் ஜனாதிபதி சட்டத்தரணி திலக் மாரப்பன, நிஸ்சங்க சேனாதிபதியின் சட்ட ஆலோசகராக பணியாற்றுவது தொடர்பில் அமைச்சர் சம்பிக்க ரணவக்க கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

எவண் காட் நிறுவனத்தின் உரிமையாளரது கடவுச்சீட்டை நீதிமன்றம் முடக்கிய பின்னர், அதனை பெற்றுக்கொடுக்க நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச மற்றும் பிரதமரின் ஆலோசகர் திலக் மாரப்பன ஆகியோர் தலையிட்டுள்ளதாக நிறைவேற்றுச் சபையில் ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலத்தில் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும். அவர்களுக்கு தண்டனை வழங்காவிட்டால், எவராவது தண்டனை வழங்கப்படுவதை தடுத்தால் அல்லது தடையேற்படுத்தினால், அது குறித்து நாங்கள் கட்டாயம் மக்கள் மத்தியில் சென்று அவர்கள் யார் என்பதை தெரியப்படுத்துவோம் என அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், கொழும்பில் நடைபெற்ற கருத்தரங்கொன்றில் உரையாற்றிய பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன, எவண் காட் பாதுகாப்பு நிறுவனம் தனக்கு சொந்தமான மஹநுவர என்ற மிதக்கும் ஆயுத களஞ்சியத்தை நடத்திச் செல்ல தேவையான சகல அனுமதிப் பத்திரங்களையும் பெற்றிருந்தாக தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.