ரணிலுக்கு எதிராக மஹிந்தவை களமிறக்க முயற்சி, மஹிந்தவும் தயார்..?
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை களமிறக்க நான்கு அரசியல் கட்சிகள் முயற்சித்து வருகின்றன. எதிர்வரும் பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக மஹிந்த ராஜபக்ஸவை களமிறக்க வேண்டுமென ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
கொழும்பில் சற்று முன்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
புதிய இடதுசாரி முன்னணி, மஹஜன கட்சி, ஜே.என்.பி. மற்றும் பிவித்துரு ஹெல உறுமய ஆகிய கட்சிகள் முன்னாள் ஜனாதிபதி பிரதமர் வேட்பாளராக களமிறங்க வேண்டுமென விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை தோற்கடிக்க மிகவும் பொருத்தமானவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவே என அவர் தெரிவித்துள்ளார்.
ஏனெனில் கடந்த ஜனாதிபதி தேர்தலில் 5.8 மில்லியன் வாக்குகளை மஹிந்த பெற்றுக்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்தப் போட்டியானது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிரானது அல்ல எனவும், இது பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரசியல் சாசன முறைமைகளுக்கும் புறம்பான வகையிலேயே பிரதமர் நியமிக்கப்பட்டதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பை வெற்றி பாதையில் கொண்டு செல்ல பாராளுமன்றத்தில் மாத்திரமல்லாது மக்களோடு மக்களாக இணைந்து ஜனநாயக முறையில் செயலாற்றுவோம் என முன்னாள் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே முன்னாள் அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஐ.ம.சு.கூட்டமைப்பிற்கு வாக்களித்த மக்கள் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து பணியாற்றும் நோக்கில் அல்ல வாக்களித்தனர்.
முன்னாள் ஜனாதிபதியினால் அறிமுகப்படுத்தப்பட்ட மகிந்த சிந்தனை வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் நோக்கிலேயே வாக்களித்தனர் என முன்னாள் அமைச்சர் இதன் போது சுட்டிக்காட்டியதோடு, ஐ.ம.சு.கூ ஆதரவாளர்களை மீண்டும் பலப்படுத்தி அவர்களின் நம்பிக்கையை வென்றெடுக்க நாம் தொடர்ந்தும் பணியாற்றுவோம் என முன்னாள் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தான் தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்குள் பிரவேசிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பில் நாடு முழுவதுமான பிரச்சாரக் கூட்டங்களில் பங்கேற்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தங்காலை, மெதமுலனவில் நேற்று கட்சி முக்கியஸ்தர்களைச் சந்தித்து உரையாடியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமன்றி, தாம் எக்காரணத்தை கொண்டும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை விட்டுப் போவதில்லை எனவும் அவர் தமக்கு நெருங்கிய கட்சி முக்கியஸ்தர்களிடம் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
alllah miha periyavan
ReplyDelete