சுதந்திரக் கட்சியின் கோரிக்கைகளை, ஜனாதிபதி மைத்திரி கவனத்திற் கொள்வாரா..?
ஜனாதிபதியின் பதவிக்காலத்தை போன்று பிரதமரின் பதவிக் காலத்தையும் வரையறுக்குமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் கோரிக்கை முன்வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது.
எதிர்வரும் காலங்களில் பிரதமர், மாகாண முதலமைச்சர் மற்றும் மத்திய, மாகாண அமைச்சர்கள் பதவி வகிக்கக் கூடிய உச்ச வரம்பு காலங்கள் நிர்ணயிக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்படவுள்ளது.
அதனடிப்படையில் ஒரு தவணைக்கு ஐந்து ஆண்டுகள் என்ற வகையில் இரண்டு தடவைகள் பிரதமர் மற்றும் முதலமைச்சர்கள் பதவி வகிக்கக் கூடிய வகையிலும் அமைச்சரவை அந்தஸ்துடைய அமைச்சர் ஒருவரின் பதவிக் காலம் ஒரு தவணைக்கு ஐந்து ஆண்டுகள் என்ற அடிப்படையில் மூன்று தடவைகளுக்கு வரையறுக்கப்பட வேண்டுமென சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டுமென பரிந்துரை செய்யப்படவுள்ளது.
ஜனாதிபதியின் பதவிக் காலத்தை பத்து ஆண்டுகளுக்கு வரையறுக்கப்பட வேண்டுமென ஏற்கனவே யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
இதற்கு சமாந்தரமாக பிரதமர், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் பதவிக் காலங்களும் வரையறுக்கப்பட வேண்டுமென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை முன்வைக்கத் திட்டமிட்டுள்ளது.
எதிர்வரும் 14 ஆம் திகதி நடைபெறும் சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் இது குறித்த யோசனைகள் முன்வைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Post a Comment