அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு, தந்திரோபாயத்தில் இலங்கையும் உள்ளடக்கம்
-gtn-
இலங்கையில் வெளிப்படைத்தன்மை மிக்க ஜனநாய சமூகத்தை ஏற்படுத்த உதவப்போவதாக அமெரிக்கா உறுதி
இலங்கையில் வெளிப்படைத்தன்மை மிக்க ஜனநாய சமூகத்தை ஏற்படுத்துவதற்கு உதவப்போவதாக அமெரிக்கா உறுதியளித்துள்ளது.
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பிற்கான ஆலோசகர் சுசன் ரைஸ் இதனை தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி பராக் ஓபாமாவின் தேசிய பாதுகாப்பு கொள்கை குறித்த தனது உரையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மாற்றத்தை சந்தித்திருக்கும் இலங்கை , மியன்மார், துனீசியா போன்ற நாடுகளுக்கு நாங்கள் உதவுவோம்,என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க தேசிய பாதுகாப்பு தந்திரோபாயத்தில் இலங்கையும் உள்ளடக்கம் - சூசன் றைஸ்
அமெரிக்க தேசியப் பாதுகாப்பு தந்திரோபாயத்தில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சூசன் றைஸ் தெரிவித்துள்ளார்.
மாற்றம் ஏற்பட்டுள்ள நாடுகளின் வரிசையில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும், இலங்கைக்கு உதவிகள் செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு ரீதியான உதவிகளையே றைஸ் இங்கு குறிப்பிட்டுள்ளார் என்பது கவனிக்கப்பட வேண்டியது.
உலகின் அனைத்து பிராந்தியங்களிலும் உள்ள நாடுகளின் மக்களும் சுதந்திரத்தையும் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்பதனையும் கோருவதாகத் தெரிவித்துள்ளார்.
மனித உரிமைப் பாதுகாப்பு, ஊழல் மோசடி தவிர்ப்பு, நல்லாட்சி மற்றும் ஜனநாயகத்தை ஏற்படுத்தல் போன்றன தொடர்பில் சிவில் சமூகத்துடன் இணைந்து செயற்பட அமெரிக்கா விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்
ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள பர்மா, டியூனிசியா மற்றும் இலங்கை போன்ற நாடுகளின் ஜனநாயகத்தை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நல்லிணக்கத்தை ஏற்படுத்த இலங்கையின் புதிய அரசாங்கம் எடுத்து வரும் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியது என அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment