நிந்தவூர் பொதுச்சந்தையின் அவலம் தீருமா..?
-மு.இ.உமர் அலி-
அழகிய ஒரு சுற்றாடலில் புதிதாக அமைக்கப்பட்ட நிந்தவூர் பிரதேச சபையின் தென்புறமாக அமைந்துள்ளது நிந்தவூர் பொதுச்சந்தை.நிந்தவூர் மக்கள் மட்டுமன்றி வெளியூர் மக்களும் இச்சந்தையில் வாங்குதலிலும் விற்றலிலும் ஈடுபடுகின்றார்கள்.
நிந்தவூர் பிரதேச சபையின் அதிகாரத்திற்குட்பட்ட இப் பொதுச்சந்தையின் உட்தளத்தை கழுவுகின்ற நீர் ஒரு ஒழுங்கற்ற முறையில் வடிந்து செல்கின்றது.கட்டிடத்தின் முடிவில் இருந்து மண்வெட்டியினால் வெட்டப்பட்ட ஒரு சிறு வாய்க்கால் சந்தையின் தென்கிழக்குப்புறமாக உள்ள ஒரு குட்டையில் முடிவடைகின்றது.இந்தக்குட்டையில் சந்தையை தினமும் கழுவும் நீர் தேங்கிக்காணப்படுகின்றது.இத்தேக்கத்தில் நுளம்பு பெருகிக்காணப்படுகின்றது.துர்நாற்றமும்வீசுகின்றது.
ஆயிரக்கணக்கான பொதுமக்கள்வந்து செல்லும் இந்தச்சந்தையின் அவலநிலையை யாரும் இதுவரை கண்டு கொள்ளவில்லை.
மேலும் இந்தச்சந்தையில் மீன்கள் விற்பனைசெய்யும் உயர்ந்தபகுதி இலகுவாக கழுவக்கூடிய வகையில் மாபிள் போடப்படவில்லை ,வெறுமனே சீமேந்தே போடப்பட்டுள்ளது.மாபிள்கள் போடப்பட்டிருந்தால் கழுவித்துப்பரவு செய்வது மிகவும் இலகுவாக இருக்கும்.
வருடம் ஒன்றுக்கு பல இலட்சங்கள் வருமானமீட்டிக்கொடுக்கும் இந்தச்சந்தையை சுகாதார முறைப்படி பேணவேண்டியது சபையின் கடமையாகும்.அத்துடன் இந்தச்சந்தையின் நீர் வடிகாலமைப்புப்பற்றி கண்காணிக்க வேண்டியது நிந்தவூர் பொதுச்சுகாதார வைத்திய அதிகாரியினதும் கடமையாகும்.
மக்களது நடமாற்றத்திற்கு இடையூறான முறையில் சந்தையின் உட்புற பாதைகள் குன்றும்குளியுமாக நீர்தேங்கி சேறும்சகதியும் நிறைந்ததாக காணப்படுகின்றது.
நிந்தவூர் பிரதேச சபை இந்த ஆண்டுக்கான தனது வரவு செலவு திட்டத்தில் இந்தச்சந்தைக்கட்டிடத்தையும் வளாகத்தையும் புனரமைப்புச்செய்யும் வகையில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
பிரதேச சபையின் பொதுச்சுகாதார பரிசோதகர் குறிப்பிட்ட சுகாதாரமற்ற நிலைகளை அகற்றுவதற்கான முறைப்படியான திட்டங்களை உடன் பரிந்துரைத்து நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் வினயமாகக்கேட்டுக்கொள்ளுகின்றனர்.
Enge antha 2 mp maarum meyap poyittangala
ReplyDeleteMr. u.Ali, your the most important man with 2 MP s cabinet , Why do not take this mater to them , 1 mp said in openly he has spent billions in nintavur development
ReplyDeleteThis was mater of thousand ,
Please read the news carefully.i have clearly mentioned there
ReplyDelete