மஹிந்த ஆட்சி, மீண்டும் உருவானால்..?
எதிர்காலத்தில் உருவாகக்கூடிய சிறந்த முன்மாதிரியான ஒரு சமூகத்திற்காக இன்று மிகவும் அறிவுசார்ந்த நிலையை எய்வதும், அறிந்தவர்களாக தத்தமது பங்கேற்பை நல்குவதும் பிரஜைகள் நல்லாட்சி பற்றி புரிந்து கொள்ளும் அளவுக்கு ஒப்பீடாக ஆளுவோரும் தமது ஆட்சி அலுவல்களை சரியாகவும் நடுநிலையுடனும் நிறவேற்ற முற்படுவதும் அத்தகைய ஒரு சமூகக் கட்டமைப்பைக் கொண்ட முன்மாதிரியான ஒரு தேசத்தின் தோற்றப் பண்பே நல்லாட்சி என்பதாகும்.
கடந்த ஆட்சியில் ஊழல் உள்ளிட்ட ஆட்கொலை மற்றும் மோசடிகளிலிருந்து இந்நாட்டை பாதுகாக்கும் நோக்கில் மூவின சமூகத்தவர்களையும் உள்ளடக்கி சகோதரத்துவத்தை ஏற்படுத்துவதற்காக ஒரு உன்னதமான அரசை நிறுவி அதில் உறுதியான அரசாங்கத்தை அமைக்கவே நாம் வாக்களித்தோம்.
மகிந்த அரசாங்கத்தில் யுத்தத்தை நிலையாக நிறுத்தினதிலிருந்து இன்றுவரை நாடு முழுவதும் துணிச்சலுடன் அச்சமின்றி சவாரி செய்யக்கூடிய நிலைமயை ஏற்படுத்தியதே தவிர மூவின சமூகங்களும் ஒற்றுமையுடன் நல்கி வாழக்கூடிய களமொன்றை அமைத்துத்தரவில்லை. சுய நல அரசியல் நோக்குடன் இனங்களுக்கிடையிலான மோதல், வஞ்சகம், போன்ற இன வெறியை தூண்டிய மகிந்த அரசாங்கத்தின் வரலாறாக நாம் பார்க்கின்றோம்.
மகிந்த ஆட்சியை கவிழ்ப்பதற்குப் பிரதான காரணியாக அமைந்தது தமிழ்,முஸ்லிம் சிறுபான்மை சமூகத்தை பௌத்த சகோதரர்களுடன் மோதவிட்டு ஆக்கிரமிப்புத் தன்மை வாய்ந்த தேசிய வாதத்தை ஏற்படுத்துவதே. இதன் விளைவை சமூகத்தில் முன்னின்று தலையாய் இருந்தவர் ஞானசார தேரர் அவர்களே என்பதை எல்லோரும் அறிவீர். தேரரின் இந்த மோசமான செயலை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த அறிந்திருந்தும் அவருக்கு எதிராக எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை.
பாசிசக் கொள்கையாளர்களைப் போல் ஆக்கிரமிப்புத் தன்மை வாய்ந்த தேசிய வாதத்தை மீண்டும் நிலைநிறுத்த ஆங்காங்கே சில முயற்சிகள் மேற்கொண்டுவருவதனை அரசியல் அவதானிகள் கூறுகின்றனர்.
மஹிந்த ஆட்சியை ஆதரிக்கின்ற சில அரசியல் தலைவர்கள் தமிழ்,முஸ்லிம் சமூகத்தின் அரசியல் அதிகார எல்லையை அகற்றுவதன் மூலம் தனி பௌத்த சகோதரர்களின் அதிகப்படியான விருப்பு வாக்குப் பலத்துடன் ஆட்சியைக் கைப்பற்ற முனைகின்றனர். இந்த நோக்கத்திற்காகவே தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகத்தில் மேலாதிக்கம் செலுத்துவதாக புத்தி ஜீவிகள் தெறிவிக்கின்றனர்.
இவ்வாறான அரசியல் தலைமைத்துவத்துவத்துக்கு கைகோர்த்து நிற்கக்கூடாது என்பதற்காகவே மைத்திரி அரசாங்கம் முன்வந்துள்ளது. மைத்திரியின் ஆட்சியில் சகலரும் ஒரே தேசப்பிரிய மக்கள் என்பதை அடயாளம் காட்ட வேன்டியுள்ளது.
ஜனநாயக முறைப்படி தேர்தலில் வெற்றி வாகை சூடிய மைத்திரி அவர்கள் ஐந்து ஆண்டுகள் ஆட்சி செய்வதற்கான கால அவகாசம் உள்ளது. இந்த கால எல்லைக்குள் நல்லாட்சியை நிலைநிறுத்த வேண்டுமாயின் நல்லாட்சிக்காக போராடக்கூடியவர்களை அடையாளங்கண்டு முன்னிறுத்தி அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இந்த நல்லாட்சிக்கு மாறாக சதி தீட்டக்கூடிய எதிரணித்தரப்பில் உள்ளவர்கள் எவராக இருந்தாலும் அவர்களுடைய அரசியல் அதிகார எல்லையை குறைக்க வேண்டும். அப்போது தான் ஒரு தலை சிறந்த நிர்வாகத் தலைவனுக்கு ஜன நாயக்கதுடன் கூடிய நல்லாட்சி, அரசியல் கலாசாரம், அரசியல் உயர்ந்தோர் குழாம் மற்றும் அரசியல் சமூகமயமாக்கல் போன்றவற்றை நிலைநாட்ட முடியும்.
மைத்திரியின் ஆட்சிக்கு முட்டுக்கட்டை போட்டு ஆட்சியை பிறழவைத்து யாப்புச்சர்வதிகாரியான ஒரு தலைவனை மீண்டும் ஆட்சி பீடத்தில் அமர்த்தவே இன்றைய எதிரணிக் கட்சி மும்முறமாக ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது.
மூவின சமூகத்தவர்களும் சகோதரத்துவத்துடன் வாழ வேண்டும் என்பதற்காகவும், நல்லாட்சியை கட்டியெழுப்புவதற்காகவுமே நாம் வாக்களித்தோம் என்பதனை மறந்துவிக்கூடாது. இந்நாட்டில் ஜன நாயகத்துடன் கூடிய நல்லாட்சி மலர வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும். இதற்கு மாறாக, சர்வதிகார (மஹிந்த) ஆட்சி மீண்டும் உள்வாங்கப்பட்டால், இந் நாட்டு சிறுபான்மைச் சமூகத்தவர்காளான தமிழ்,முஸ்லிம் அரசியல் ரீதியாக தாக்கப்படும் என்பதில் கிஞ்சிற்றும் ஐயமில்லை. இப்படியான அரசியல் தலைவர்களுக்கு பேரார்வம் காட்டக்கூடியவர்களுக்கு இந்த அரசாங்கத்திலும் சரி, இனி வர இருக்கும் அரசாங்கத்திலும் அரசியல் சார்ந்த எந்த பதவிகளையும் வகிக்க விடக்கூடாது. அதற்கான தக்க நடவடிக்கைகளை இந்த அரசாங்கம் மேற்கொள்ள வேன்டும்.
மஹிந்த அமைப்பு ஞானசார தேரருக்கான எந்த எதிர் நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என்பதே தமிழ்,முஸ்லிம்களிம் கவலைக்குறிய விடயமாகும். தேரரின் கடும் துவேசப் பிரச்சாரமே மஹிந்தவின் தோழ்விக்கு மிகப் பிரதான காரணியாகும். இப்படி இருந்தால் மஹிந்தவுக்கு எந்த நன்நம்பிக்கையில் ஆதரவளிப்பது?? துஷ்டனைக் கண்டால் தூர விலகு என்பதைப் போல் நாம் விழிப்பாக இருக்க வேண்டும்.
மஹிந்த ஆட்சி கவிழ்வதற்கு உண்மையில் காரணமானவர் இந்த ஞானசார தேரரேயாவார் .இதனை அனைவரும் ஏற்றுக்கொள்கின்றார்கள் .அப்படியானால் இவர் உண்மையில் மகிந்தவுக்கு ஆதரவானவரா ? அல்லது மகிந்தவின் எதிரியா ?
ReplyDeletevery good
ReplyDelete