Header Ads



பாரிய ஊழல்களை பற்றி விசாரணை செய்ய, விசேட ஜனாதிபதி ஆணைக்குழு - மைத்திரிபால அறிவிப்பு

-tm-

கடந்த அரசாங்கத்தின் போது இடம்பெற்ற பாரிய ஊழல்களை பற்றி விசாரணை செய்வதற்கு விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று அடுத்தவாரம் நிறுவப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

அரலகங்விலவில் இன்று இடம்பெற்ற வைபவமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பதவி, தராதரம், கட்சி மற்றும் நபர்கள் யாரென்று பார்க்காது இந்த ஆணைக்குழு செயற்படும்.‍  

சொத்துக்களை முடக்கிய, களவெடுத்த, ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட சகலரும் ஆணைக்குழுவின் முன்பாக கொண்டுவரப்படுவர் என்றும் அவர் தெரிவித்தார்.

புதிய அரசாங்கம் பதவியேற்று ஒரு மாதம் கடந்துவிட்டது. இந்நிலையில் ஊழல், மோசடி, கொள்ளை மற்றும் நிர்வாக சீர்கேட்டில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக ஏன் செயற்படவில்லை என்பது தனது சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் மக்கள் அந்த திசையை நோக்கி பார்த்துகொண்டிருக்கின்றனர். தற்போதே காலம் கடந்துவிட்டது என்றும் அவர் தெரிவித்தார். 

No comments

Powered by Blogger.