மஹிந்த ராஜபக்ஸ, மீண்டும் சிறைச்சாலைக்கு சென்றார்
முன்னாள் பிரதி அமைச்சர் பிரேமலால் ஜயசேகர எனப்படும் சொகா மல்லியை, சிறைச்சாலைக்கு சென்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பார்வையிட்டுள்ளார்.
இன்று 26-02-2015 பிற்பகல் குருவிட்ட சிறைச்சாலைக்கு சென்றுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுடன் சப்ரகமுவ மாகாணசபையின் அமைச்சர்களான ரஞ்சித் பண்டார மற்றும் பண்டார ராஹூபத்த ஆகியோரும் இணைந்து கொண்டிருந்தனர்.
குருவிட்ட சிறைச்சாலை வைத்தியசாலையில் முன்னாள் பிரதி அமைச்சர் பிரேமலால் ஜயசேகர சிகிச்சை பெற்று வருகின்றார்.
முன்னாள் பிரதி அமைச்சர் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்றுடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் ஆதரவாளர் ஒருவரை துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காக்கி கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அப்படியே போதைப்பொருள் கடத்தல் குற்றவாளியான வெலே சுதாவையும் ஒரு நடை சென்று பார்த்துவிட்டு வாருங்களேன், முன்னாள் ஜனாதிபதி அவர்களே.
ReplyDelete