Header Ads



ஹம்பாந்தோட்டையில் ஆயுதக் களஞ்சியசாலைகள் இல்லை - சஜித்திற்கு நாமல் பதில்

ஹம்பாந்தோட்டையில் ஆயுதக் களஞ்சியசாலைகள் கிடையாது என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் நமால் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

கடந்த அரசாங்க ஆட்சிக்காலத்தில் இவ்வாறான ஆயுதக் களஞ்சியங்கள் காணப்பட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மையும் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.

பெலியத்தவிலோ அல்லது வீரகெட்டியவிலோ இவ்வாறான சட்டவிரோத ஆயுதக் களஞ்சியங்கள் காணப்பட்டமைக்கான எவ்வித ஆதாரங்களும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் இவ்வாறான எந்தவொரு சட்டவிரோத இரகசிய ஆயுதக் களஞ்சியசாலையும் கிடையாது என்பதனை உறுதியுடன் கூற முடியும் என அவர் தெரிவித்துள்ளார். நீலப்படையணியின் எவ்வித குழப்பங்களையோ தாக்குதல்களையோ மேற்கொள்ளவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

நீலப்படையணி எந்தவொரு சட்டவிரோத செயற்பாடுகளிலும் ஈடுபடவில்லை என்பதனை மிகவும் பொறுப்புடன் கூற முடியும் என நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இதேவேளை, ஹம்பாந்தோட்டையில் சட்டவிரோத ஆயுதக் களஞ்சியச்சாலைகள் இயங்கி வருவதாக அமைச்சர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.