தயவுசெய்து பாராளுமன்றத்தை கலைத்துவிடாதீர்கள் - சபையில் கெஞ்சிய சர்ச்சைக்குரிய எம்.பி.
பாராளுமன்றத்தை இன்னும் ஒரு வருடத்திற்கு கலைக்க வேண்டாமென கோரிய எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் அருந்திக பெர்னாண்டோ, அரசுக்கு தேவையான ஒத்துழைப்பை நாங்கள் வழங்கத் தயார் என்றும் கூறினார். பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வரவு செலவுத் திட்டம் மீதான விவாததில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்;
மகிந்த ராஜபக்ஷவை ஆட்சியிலிருந்து அகற்றுவதற்குத் தான் மக்கள் தீர்ப்பு வழங்கினார்கள். ஆனால் ஜனாதிபதி மட்டுமல்ல அரசே மாறிவிட்டது. அத்துடன், நின்றாலும் பரவாயில்லை. திணைக்களத் தலைவர்களிலிருந்து உயரதிகாரிகள் வரை பலர் மாறுகின்றனர். மக்களின் தீர்ப்பை இந்த அரசு வேடிக்கையாக்கிவிட்டது. மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடனிருந்த அரசு இன்று பெரும்பான்மை பலத்துடன் எதிர்க்கட்சியாகவிருக்கின்றது. சிறுபான்மையாகவுள்ள கட்சி இன்று பிரதமர், அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் என ஆட்சி புரிகின்றது. இதனைப் பார்க்கும் போது வேடிக்கையாகத்தான் உள்ளது. இன்னும் 3 மாத காலப் பகுதியில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு கோடிக்கணக்கான ரூபா பணச் செலவில் பொதுத் தேர்தல் நடத்தப்படவுள்ளது. பணம் வீண்விரயம் செய்யப்படவுள்ளது.
இந்தப் பாராளுமன்றத்திற்கு இன்னும் ஒரு வருட ஆயுள் உள்ளது. எனவே தயவு செய்து இப்பாராளுமன்றத்தை 3 மாத காலத்தில் கலைத்துவிடாது ஒரு வருடத்திற்கு கொண்டு செல்லுமாறு கோருகின்றேன். இந்த அரசின் நல்ல திட்டங்களுக்கு நாம் ஆதரவு வழங்கத் தயாராகவேயிருக்கின்றோம். எனவே அவசரமாக பாராளுமன்றத்தை கலைக்க வேண்டாமெனக் கோருகின்றேன் என்றார். -
ஆகா.. ஓதும் வேதம் காதுக்கு இனிமையாகத்தான் இருக்கின்றது. ஆனால், அது வருவது என்னவோ சாத்தானின் வாயிலிருந்து..
ReplyDeleteஅதுதான் பிரச்சினையே!