நல்வழிப்படுத்துவதற்காக குழந்தைகளை அடிப்பது சரியானதே - போப் பிரான்சிஸ்
பெற்றோர்கள் குழந்தைகளை நல்வழிப்படுத்துவதற்காக அவர்களை அடிப்பது சரியானதே என்று போப் பிரான்சிஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
வாடிகனில் வாரம்தோறும் நடைபெறும் பொது பார்வையாளர்கள் சந்திப்பில் இந்த வாரம் குடும்பம் மற்றும் தந்தையின் பங்கு குறித்து பேசிய போப், தவறுகளை மன்னிப்பதும் அதே நேரம் அவர்களை உறுதியோடு நல்வழிப்படுத்துவதுமே நல்ல தந்தைக்கான பண்பு என்றார்.
ஒரு முறை சந்திப்பு ஒன்றில் அவரிடம் பேசிய தந்தை, "நான் என் குழந்தையை நல்வழிப்படுத்துவதற்காக அடிக்கிறேன். ஆனால் அவன் முகத்தில் நான் அடிப்பதில்லை" என்று கூறியதை நினைவுபடுத்திய போப், எவ்வளவு அழகாக அந்த தந்தை தன் செயலை எடுத்துரைத்தார். அவருக்கு கண்ணியமாக நடந்து கொள்ளத்தெரிந்திருக்கிறது. குழந்தைகளை தண்டிக்கலாம் ஆனால் அது மென்மையான தண்டனையாக இருக்க வேண்டும் என்றார்.
போப்பின் இந்த பேச்சிற்கு ஆதரவாகவும் எதிராகவும் பொதுமக்களிடையே விமர்சனங்கள் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Post a Comment