Header Ads



ரணில் விக்ரமசிங்கவை தோற்கடித்து, புதிய அரசாங்கமொன்றை அமைக்கவுள்ளோம் - நிமால் சிறிபால சில்வா

எதிர்வரும் பொதுத் தேர்தலில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை தோற்கடிப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவை தோற்கடித்து புதிய அரசாங்கமொன்றை அமைக்க உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் 14ம் திகதி சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் கூடி எதிர்வரும் பொதுத் தேர்தல் குறித்து தீர்மானங்களை எடுக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் சுதந்திரக் கட்சியின் பிரதமர் ஒருவர் ஆட்சி செய்வதனையே விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.

கட்சித் தலைவரையும் கட்சியையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஊவா மாகாணத்தில் ஹரீன் பெர்னாண்டோவை முதலமைச்சராக நியமிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு எதிராகவும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உரிய விசாரணைகளின் மூலம் எவரேனும் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டமை நிரூபிக்கப்பட்டால் அவர்களை கட்சியிலிருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கடந்த அரசாங்கம் தமக்கு உரிய இடத்தை வழங்கத் தவறியதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

எவ்வாறெனினும் கட்சியை விட்டு விலகிச்செல்லவில்லை எனவும் பதவியை விடவும் கட்சியை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. So, MR going to be the potential Executive
    Prime Minister?

    ReplyDelete
  2. May God Save our sweet land from the past ... people?

    ReplyDelete

Powered by Blogger.