சம்பிக்கவுடன் இணைந்து, வாராந்த சந்தைக் கட்டிடத்தை திறந்துவைத்தார் ரவூப் ஹக்கீம்
-அஸ்ரப் ஏ சமத்-
கல்கிசை டெம்பலஸ் வீதிக்கும் அத்தடிய வீதியைத் தொடும் சந்தியில் வாராந்த சந்தைக் கட்டிடத்தை இன்று அமைச்சகளான நகர அபவிருத்தி அமைச்சர் ரவுப் ஹக்கீம், மிண்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சரும் ரத்மலானை, தெஹிவளை பிரதேச செயலகங்களின் அபிவிருத்திக் குழுத் தலைவருமான சம்பிக்க ரணவக்க ஆகியோரினால் இன்று காலை திறந்து வைக்கப்பட்டது.
கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வாராந்த சந்தையொன்று இல்லாமையால் பிரதான பாதையோரம் அகங்காடி வியாபாரிகள் வியாபாரம் நடத்திவந்தமையால் பொதுமக்களும் போக்குவரத்து பயணிகளும் பாரிய பிரச்சினைகள் எதிர்நோக்கினர். இந் நிலைமையை தெஹிவளை கல்கிசை மேயரின் வேண்டுகோலின் பேரில் முன்னாள் நகர அபிவிருத்தி செயலாளராக கடமையாற்றிய கோட்டபாய ராஜபக்ச அவர்களின் வேண்டுகோழுக்கிணங்கவே நகர அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமாண இக் காணியில் அத்துமீறி இருந்தவர்களை வெளியேற்றி இவ் வாராந்த சந்தையை நிர்மாணிக்க நடவடிக்கை எடுத்திருந்தார். புதிய அமைச்சர்கள் இதனை இன்று திறந்து வைத்து மக்களிடம் கையளித்தனர்.
Post a Comment