மஹிந்த அரசின் குற்றக்கும்பலை, மைத்திரி அரசு பாதுகாக்கின்றது..?
-நஜீப் பின் கபூர்-
சட்டம் ஒரு கழுதை. இப்படி ஒரு வசனம் சட்டம் தொடர்பாக பேசப்படுவதுண்டு. கழுதை முன்னால் போனால் மோதும் பின்னால் போனால் உதைக்கும்! அதனால்தான் சட்டம் தொடர்பான அப்படி ஒரு பார்வை சமூகத்தில் இருக்கின்றது. அதே போன்று பணப் பலத்தால் நீதியையும் வலைத்துப் போட முடியும் என்பதற்கும் கதைகள் நிறையவே இருக்கின்றது. பணம் என்றால் பிணமும் வாய்திறப்பது பற்றிய கதையும் வழக்கில் இருந்து வருகின்றது. சமகால நமது நாட்டு அரசியல் நடப்புக்களைப் பார்க்கின்ற போது சட்டம், நீதி தொடர்பில் புதியதோர் பதிவையும் சேர்த்துப் போட வேண்டும் போல் தோன்றுகின்றது. அரசியல் பலத்தின் முன்னே சட்டம் முடங்கிப் போகும். அப்பாவிகள் முன்னே அது வீறுகொண்டு எழுந்து நின்று கொள்ளும். இது நீதி தொடர்பில் எமது புதிய பதிவு!
ராஜபக்ஷ விசுவாசிகள் தற்போதய அரசு அரசியல் பழிவாங்கள்களை நடாத்திக் கொண்டிருக்கின்றது. இப்படியே நிலமை தொடர்ந்து சென்றால் 100 நாள் வேலைத் திட்டத்திற்கு வழங்குகின்ற ஆதரவு விடயத்தில்கூட நாம் ஒரு தீர்மானத்திற்கு வர வேண்டி வரும் என்று சுதந்திரக் கட்சி அரசியல்வாதிகள் சிலர் புதிய மைத்திரி-ரணில் அரசுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கின்றனர். மறுபுறத்தில் ஜனாதிபதி எங்களுடைய கட்சிக் காரர். எனவே நாம் அவருடைய வேலைத் திடட்டங்களுக்கு ஆதரவாகப் பாராளுமன்றத்தில் நடந்து கொள்வோம் என்றும் தமது இணக்கப்பாட்ட வெளியிட்டு வருகின்றார்கள். எனவே சுதந்திரக் கட்சியில் உள்ளவர்கள் ஒன்றுக் கொன்று முரன்பாடாக உள்ளேயும் வெளியேயும் பேசுகின்றார்கள் நடந்து கொள்கின்றார்கள்.
சுதந்திரக் கட்சியின் உயர் பதவிக்கு சந்திரிகாவையும் ராஜபக்ஷவையும் நியமனம் செய்த விடயத்தில், அந்தப் பதவியை சந்திரிக ஏற்றுக் கொள்ளாது நிராகரித்து விட்டிருக்கின்றார். மைத்திரி சந்திரிகாவிடம் சற்று இது விடயத்தில் பொறுமை காக்குமாறு கேட்டுக் கொண்டதால், தான் இந்த விடயத்தில் தற்போது மௌனமாக இருப்பதாக சந்திரிகா பகிரங்கமாக பேசிவருவதுடன். ராஜபக்ஷக்கள் இந்த நாட்டு பொது மக்களுக்குப் பெரும் அநீதிகளைச் செய்தும், நாட்டின் பொருளாதாரத்தை இந்த நாட்டுத் தலைவர்கள் எவரும் செய்யாத வகையில் சூறையாடியும் இருக்கின்றார்கள். இப்படியாக அவர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் இருக்கின்ற நிலையில் மஹிந்த ராஜபக்ஷக்களுடன் ஒரே மேடையில் அமர்ந்து எப்படி அரசியல் செய்வது? ராஜபக்ஷக்களின் சர்வாதிகாரம் ஊழல் மோசடிகள் பற்றி மக்களிடம் பேசியே நாம் ஜனாதிபதித் தேர்தலை முன்னெடுத்தோம். அப்படி அரசியல் செய்த நாம் பொதுத் தேர்தலில் கள்வர்களுடன் ஒரே மேடையில் அமர்ந்து மக்களிடத்தில் எப்படி வாக்குக் கேட்டுப் பிரச்சாரம் பண்ண முடியும் என்றும் சந்திரிக்க கேள்வி எழுப்புகின்றார்.
சுதந்திரக் கட்சியில் மைத்திரி சந்திரிகா மஹிந்தவை இணைத்து அடுத்த தேர்தலில் நாம் முகம் கொடுக்க வேண்டும் என்று வாதிடுவோரும், மஹிந்தவை ஓரம்கட்டிவிட்டு தேர்தலுக்கு செல்ல வேண்டும் என்று கருதுவோரும் இருக்கின்றார்கள். தமக்குப் பாராளுமன்றத்தில் இடம்பிடிப்பதற்காக மஹிந்த தலைமையில் புது அணி சமைத்து களமிறங்க வேண்டும் என்று தினேஷ், விமல், வாசு போன்றவர்கள் கருதுகின்றார்கள்.
அடுத்த பொதுத் தேர்தலில் சுதந்திரக் கட்சி பிரதம வேட்பாளராக மஹிந்தவை களமிறக்கி மைத்திரிக்குத் தெந்தரவு கொடுக்க சிலர் முனைகின்றார்கள். எனவே சுதந்திரக் கட்சி பிரதம வேட்பாளராக யாரை நிறுத்துவது என்ற விடயத்தில் மைத்திரி நிறையவே சிந்திக்க வேண்டி இருக்கின்றது. இந்த விடயத்தில் கட்சிக்குள் உள்நோக்கங்களுடன் காய் நகர்த்தல் வேலைகளை மைத்தரி மஹிந்த இரு தரப்பிலும் செய்வார்கள்.
விமல் வீரவன்ச தரப்பினர் வருகின்ற தேர்தலில் இனவாதத்தைக் கிளப்பி குறிப்பாக வடக்கு, கிழக்கு தமிழ் மக்களுக்கு சார்பாக மைத்திரி-ரணில் அரசு நடந்து கொள்கின்றது என்ற பிரச்சாரத்தை தற்போது அவர்கள் முடக்கிவிட்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது. மைத்திரி-ரணில் தமிழ் ஈழத்தை வழங்குவதற்கான நிகழ்ச்சி நிரலுடன் அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக சிங்கள மக்கள் மத்தில் அவர்கள் கதைகளைப் பரப்பி வருகின்றார்கள்.
இப்படியாக அரசியல் அரங்கில் நகர்வுகள் முன்னெடுத்துச் செல்லப்டுகின்ற அதே நேரம் கடந்த கால ராஜபக்ஷக்களின் காலத்தில் நடந்த அரசியல் அத்துமீறல்கள் மற்றும் ஊழல்கள் தொடர்பில் மைத்திரி-ரணில் அரசு மென்போக்கைக் கடைப்பிடித்து வருகின்றது என்றும் ராஜபக்ஷ அரசின் குற்றக் கும்பலுக்கு அவர்கள் பாதுகாப்புக் கொடுக்கின்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருக்னிறது என்ற குற்றச்சாட்டு தற்போது மக்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது.
தேர்தல் மேடைகளில் பரபரப்பாகப் பேசப்பட்ட ஹெரோயின், எதனோல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற அரசியல்வாதிகள் பெயர்வாரியாக கூறி பேசப்பட்டாலும் இன்று வரை அவர்கள் சுதந்திரமாக இருந்து வருகின்றார்கள். மேலும் பொது மக்களுக்குச் சொந்தமான நில ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள், கொந்தரத்து நடவடிக்கைகளில் கொமிஷ் பெற்றவர்கள், சட்டத்திற்கு முறனாக யானை வைத்திருந்தவர்கள் பற்றியெல்லாம் பெரிதாகப் பேசப்பட்டது. அந்தப் பேச்சுக்கள் மேடைப் பேச்சுக்கு மட்டும் மட்டுப்பட்டு விட்டதாகவே தெரிகின்றது.
ஜனாதிபதிக் காரியலயத்தில் இருந்த பல நூறு பெறுமதியான வாகனங்களுக்கு என்ன நடந்தது என்பதை இது வரை கண்டு பிடிக்க முடியாமல் இருக்கின்றது. ஜனாதிபதிக்காரியலயத்தில் இந்த வாகனங்களுக்கு பொறுப்பாக இருந்தவர் கீர்த்தி சமரசிங்ஹ என்றவர். இவர் ஒரு வாகான ஓட்டுனராக பதவி வகித்தவர். இவரே ஜனாதிபதி காரியாலயத்தில் வாகானங்களுக்கு பொறுப்பான பணிப்பாளராக நியமித்திருக்கின்றார்கள். இந்த வாகனங்களுக்கு என்ன நடந்தது என்று கோட்டால் அவரால் பதில் சொல்ல முடியாதிருக்கின்றது.
தற்போது சுது வெல்ல மக்கள் வங்கியில் தங்கல்ல கால்ட்டன் இல்லத்தை முகவரியாகக் கொண்ட வங்கிக் கணக்கொன்று (143100146235069) கண்டறியப்பட்டிருக்கின்றது. தேசிய அடையாள அட்டை இந்த வங்கிக் கணக்கு முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளது. அதில் பலநூறு மில்லியம் ரூபாய்கள் கொடுக்கல் வாங்கள் செய்யப்பட்டு வந்திருக்கின்றது. இது எந்த வகையில் சாத்தியம். ஒரு வேலை ஆசியாவின் ஆச்சர்யத்தையும் தண்டி கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் பதியப்பட வேண்டிய ஒரு வங்கிக் கணக்காகவும் இது இருக்க முடியும். இது யாருடைய வங்கிக் கணக்கு என்று தேடிப் பார்த்தால். முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஷவின் மனைவி சிராந்தியின் பெயரில் இந்தக் கணக்கு இருப்பதாக ஒரு ஊடகக் குறிப்பில் சொல்லப்பட்டிருக்கின்றது.
கோத்தாபே ராஜபக்ஷவிடமிருந்த பதிவு செய்யப்படாத யானைகள் இரண்டையும் பின்னவலை யானைகள் சரணாலயத்திற்கு கையளித்து விட்டு அவர் இப்போது தப்பிக் கொண்டிருக்கின்றார் என்று தெரிய வருகின்றது. நாமல் ராஜபக்ஷ தனது தந்தைக்காக தேர்தல் பயணங்களை மேற்கொண்டதற்காக 150 இலட்சம் ரூபாய்களை இலங்கை விமானப் படைக்கு செலுத்த வேண்டி இருக்கின்றது.
ஒரு சாதாரண குடிமகன் இப்படி ஒரு காரியத்தைப் பார்த்திருந்தால் சட்டம், நீதி என்பன எப்படி நடந்து கொண்டிருக்கும் என்பதனை நாம் கேட்க வேண்டி இருக்கின்றது. எனவே தான் நாம் முகப்பில் 'சமகால நமது நாட்டு அரசியல் நடப்புக்களைப் பார்க்கின்ற போது நீதி தொடர்பில் புதியதோர் பதிவையும் சேர்த்துப் போட வேண்டும் போல் தோன்றுகின்றது. அரசியல் பலத்தின் முன்னே சட்டம் முடங்கிப் போகும் அப்பாவிகள் முன்னே அது வீறுகொண்டு எழுந்து நிக்கும். என்று சொல்லி இருந்தோம்.
எனவே அப்பாவிகளுக்கு ஒரு சட்டமும் அதிகாரம் படைத்தவர்களுக்கு ஒரு சட்டமும் இங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருவதை தெளிவாக அவதானிக்க முடிகின்றது. நல்லாட்சி பற்றிப் பேசுகின்ற மைத்திரி-ரணில் நிருவாகத்திலும் குற்றக் கும்பல்களுக்குப் பாதுகாப்பு என்றால் இந்த நாட்டு மக்களுக்கு புதியதொரு பாதை பற்றி யோசிக்க வேண்டிய காலம் வந்து விட்டது என்றுதான் கூற வேண்டும்.
ஜேவிபி, ஹெல உறுமய மற்றும் வெகுஜன இயக்கங்கள் இது விடயத்தில் கடும் போக்குடன் இருந்தாலும் அவர்களுடடைய வேகத்திற்கு தற்போதய அரச நிருவாகம் ஈடுகொடுப்பதாகத் தெரியவில்லை.இதற்கு அவர்கள் பக்கத்தில் காரணங்கள்-நியாயங்கள் இருக்கலாம்.என்றாலும் குற்றவாலிகள் எவராக இருந்தாலும் அவர்களை இந்த அரசு தப்பித்துக் கொள்ள வழி சமைக்குமானால் இந்த நாட்டு சொத்தை பதவிக்கு வருகின்ற அரசியல்வாதிகள் தராளமாக சூறையாட முடியும் எவரும் சட்டத்தையும் நீதியை மதிக்காமல் தன்னிஸ்டத்திற்கு நினைத்தபடி ஆட்சி அதிகாரத்தை வழி நடந்தவும் முடியும் என்படுதான் அதன் அர்த்தம் என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.
Post a Comment