Header Ads



மாயமான மலேசிய விமானம், குறித்து புதிய தகவல்

மாயமான மலேசிய விமானம் வேண்டுமெ ன்றே அண்டார்டிக்கா நோக்கி இயக்கப்பட்டுள்ளது என்று விமான போக்குவரத்து நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

மலேசிய தலைநகர் கோலாலம்பு+ரில் இரு ந்து சீன தலைநகர் பீஜpங் நோக்கி கடந்த மார்ச் மாதம் 239 பேருடன் பயணித்த எம். எச். 370 விமானத்திற்கு என்ன ஆனது என் பது குறித்து இதுவரை எந்த துப்பும் கிடை க்கவில்லை.

காணாமல் போன விமானம் பற்றிய செயற் கைகோள் தகவல் திரட்டுகளை ஆராய்ந்த உலகின் பிரபலமான வானூர்தி பேரழிவு நிபுணர்கள், விமான கட்டுப்பாட்டு மையத்துட னான தொடர்பு துண்டிக்கப்பட்ட பின், சில மணி நேரம் வானில் பறந்ததை கண்டுபிடித் துள்ளனர். கிடைத்துள்ள ஆதாரங்களை மிக வும் கவனமாக ஆராய்ந்ததில், கடைசி ரேடியோ தொடர்புக்கு பின் விமானம் மூன்று முறை திரும்பியது தெரியவந்துள்ளது.

முதல் முறை இடது பக்கமாக திரும்பிய விமானம், பின்னர் மீண்டும் மீண்டும் 2 முறை இடது பக்க மாகவே திரும்பி மேற்கு நோக்கி பயணித்து, பின்னர் தெற்கு புறமாக அண்டார்டிகாவை நோக்கி சென்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உலகின் முன்னணி விமான போக்குவர த்து நிபுணர் மால்கொம் பிரெனர், விமான த்தின், விமானிகள் அறையில் இருந்த யாரோ ஒருவரால் விமானம் வேண்டுமென்றே அண் டார்டிக்கா நோக்கி இயக்கப்பட்டது என்று திட்டவட்டமாக கருத்து தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.