குறைகளை கேட்டறிந்தார் ஹசன் அலி
-மு.இ. உமர் அலி-
இன்று 2015 February 23 திங்கட்கிழமை சுகாதார இராஜாங்க அமைச்சர் அல்ஹாஜ் MT ஹசன் அலி அம்பாறை மாவட்டத்தின் மாகாண சபைக்குட்பட்ட வைத்தியசாலைகளுக்கு கிழக்குமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் , கல்முனை பிராந்தியசேவைகள் பணிப்பாளர் மற்றும் மாகாண சுகாதார அதிகாரிகள், மத்திய சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகள் சகிதம் விஜயம் செய்து வைத்தியசாலைகளை அவதானித்ததுடன், அவற்றின் குறைகளையும் கேட்டறிந்தார்.
பிற்பகலில் நிந்தவூர் மாவட்டவைத்திய சாலைக்கு வருகைதந்த அமைச்சரை மாவட்ட வைத்திய அதிகாரி,தாதியர்கள்,மற்றும் ஊழியர்கள் ,வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினர் குழுவினர் ஒன்றாக இணைந்து வரவேற்று உபசரித்தனர்.அமைச்சருடன் வருகைதந்த குழுவினர் வைத்தியசாலை முழுவதையும் சுற்றிப்பார்த்தனர்.அமைச்சர் கொழும்பிலிருந்து வந்த அதிகாரிகளுக்கு சுனாமியால் முற்றாக பாதிக்கப்பட்ட இவ்வைத்தியசாலை வெளிநாட்டு செஞ்சிலுவைச்சங்கத்தினால் புதிதாக நிர்மாணிக்கப்பட்டது பற்றி பிரஸ்தாபித்தார்.
மேலும் இந்த விஜயத்தின்போது அமைச்சர் நிந்தவூர் மாவட்ட வைத்தியசாலைக்கு OXYGEN CONCENTRATOR எனும் உபகரணம் ஒன்றினை மாவட்ட வைத்திய அதிகாரியிடம் கையளித்தார்.
அவசர சிகிச்சைப்பிரிவு மற்றும் விடுதிகளில் ஒட்சிசன் சிகிச்சை தேவைப்ப்படும் நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்க இவ்வுபகரணம் மிகவும் உதவியாக இருக்கும்.
மேலும் அமைச்சர் தன்னாலான உதவிகளை இந்த வைத்தியசாலைக்கு செய்ய திடசங்கற்பம் கொண்டுள்ளதாக கூறினார்.
Post a Comment