வெலிக்கடைச் சிறைசாலையில், மஹிந்த ராஜபக்ஷ
-tm-
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வெலிக்கடைச் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்கவை இன்று திங்கட்கிழமை பார்வையிட்டார். திஸ்ஸ அத்தநாயக்கவுடன் சில நிமிடங்கள் உரையாடிய பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகிய இருவருக்கும் இடையில் இரகசிய ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டுள்ளது என்று திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி தெரிவித்திருந்தார்.
அதில், 13ஆவது திருத்தத்தின் ஊடாக வடக்கு,கிழக்கு அதிகாரங்கள் வழங்குவோம், தமிழர்கள் எதிர்பார்க்கும் அனைத்து காரியங்களையும் செய்துகொடுப்போம் என உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கும் போலியான ஆவணமொன்றை ஊடகவியலாளர் மாநாடொன்றின்போது திஸ்ஸ எம்.பி காண்பித்தார். அந்த ஆவணம் தொடர்பில் விசாரணை நடத்திய குற்றப்புலனாய்வு பிரிவினர், திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதனையடுத்தே அவரை, விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
Munkootiye warrappohira iddathai wanthu parkiraro
ReplyDelete
ReplyDelete'ம்ம்..அப்புறம் எப்பிடியிருக்கிறீங்க திஸ்ஸ..?'
'சே! 'அத்த' நாயக்கவாக இருந்த என்னை 'பொறு' நாயக்கவாக்கிட்டீங்களே.. உங்க பேச்சை நம்பி எப்பிடியிருந்த நான் இப்பிடியாயிட்டேன்.. பாருங்க?'
'பயப்படாதீங்க.. நாங்க இருக்கிறோம்.. ஒங்களை பாத்துக்குவோம்'
'அதுதான் இப்ப பல்லுப்போன சிங்கமாயிட்டீங்களே.. இனி எப்பிடி பாப்பதாம்?'
'இல்ல நாங்களும் இங்கதானே வரப்போறம்.. அப்ப பாத்துக்குவோம்.. அதுதான் சொன்னேன்'