ஈரான் ஆதரவுடன் அரபு நாடான யேமனில், ஆட்சியை கைப்பற்றியதாக ஷியா பிரிவு அறிவிப்பு
சன்னி பிரிவினரைப் பெரும்பான்மையாகக் கொண்ட அரபு நாடான யேமனில், ஷியா பிரிவைச் சேர்ந்த ஹூதி இனக் கிளர்ச்சியாளர்கள் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளதாக வெள்ளிக்கிழமை அறிவித்தனர்.
இதன்மூலம், ஏற்கெனவே அந்த நாட்டு நாடாளுமன்றத்தை கைப்பற்றியிருந்த கிளர்ச்சியாளர்கள், ஆட்சியை அதிகாரப்பூர்வமாகக் கைப்பற்றினர்.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
ஈரான் ஆதரவுடன் சிறுபான்மை ஷியா பிரிவினர் ஆட்சியைக் கைப்பற்றியிருப்பதால், யேமனில் உள்நாட்டுப் போர் வெடிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
மேலும், அரசுக்கும், ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கும் எதிராக பயங்கர செயல்களில் ஈடுபட்டு வரும் அல்-காய்தா இயக்கத்துக்கு ஆதரவு பெருகும் அபாயம் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
Post a Comment