Header Ads



இந்திய ஜனாதிபதிக்கு, கடிதம் அனுப்பிய ஜனாதிபதி மைத்திரி

இந்தியாவுடனான உறவை மேம்படுத்துவதற்கும், அதன் பலனை இரு நாட்டு மக்களும் பெறுவதற்கும், இலங்கை தொடர்ந்து முயற்சிக்கும்' என, இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார். இலங்கை அதிபராக பதவியேற்றுள்ள மைத்ரிபாலா சிறிசேனவுக்கு வாழ்த்து தெரிவித்து, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கடிதம் எழுதியிருந்தார். இந்தியாவுக்கு வரும்படியும், அவருக்கு அழைப்பு விடுத்திருந்தார். இதையேற்று, மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக, வரும், 15ம் தேதி, சிறிசேன இந்தியா வருகிறார். 

இந்நிலையில், தனக்கு வாழ்த்து தெரிவித்த பிரணாப் முகர்ஜிக்கு நன்றி தெரிவித்து, சிறிசேன எழுதியுள்ள கடிதம்: எனக்கு வாழ்த்து தெரிவித்தததற்கும், இந்தி யாவில் சுற்றுப் பயணம் செய்ய அழைப்பு விடுத்ததற்கும் நன்றி. இலங்கை, இந்தியாவின் நட்பு நாடு மட்டுமல்ல; அண்டை நாடும் கூட. இரு நாடுகளும் கலாசார ரீதியாகவும், வரலாற்று ரீதியாகவும் தொடர்பு உடையவை. இரு நாடுகளின் உறவை மேம்படுத்துவதற்கும், இதன் மூலம், உறவில் ஒரு புதிய உயரத்தை எட்டுவதற்கும் இலங்கை தொடர்ந்து முயற்சிக்கும். இந்த உறவால் ஏற்படும் பலன்களை, இரு நாட்டு மக்களும் பெறுவதற்கும் முயற்சி மேற்கொள்ளப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

No comments

Powered by Blogger.