Header Ads



கொலைசெய்யப்பட்டவரின் சடலத்துடன் 'செல்பி' எடுத்த, மாணவன் கொலைக் குற்றச்சாட்டில் கைது

அமெரிக்காவில் கொலைசெய்யப்பட்ட மாணவனின் சடலத்துடன் 'செல்பி' படம் பிடித்துக்கொண்ட சக மாணவன் கொலைக் குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

16 வயதான மக்ஸ்வெல் மோர்டன் என்பவர் ரியான் மனகான் என்பவரை கொலை செய்த குற்றத்திற்காக பிட்டிஸ்பேர்க் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபர் ஸ்னப் சாட் என்ற மென் பொருளொன்றை பயன்படுத்தி கொல்லப்பட்ட சடலத்துடன் செல்பி எடுத்துள்ளார்.

இந்த செல்பி படம் நண்பர்களின் கையடக்க தொலைபேசிக்கு சென்றதால் சந்தேக நபர் பொலிஸாரிடம் சிக்கியுள்ளார். "ஒரு கறுப்பின ஆண் தனது முகத்தை செல்பி படம் எடுத்திருப்பதோடு அதன் பின்னணியில் கொல்லப்பட்டவர் இருக்கிறார்" என்று பொலிஸார் விபரித்துள்ளனர்.

இந்நிலையில் மக்ஸ்வெல் மோர்டன் தனது சக மாணவன் மனகானை கொலை செய்ததாக பொலி ஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். மோர்டனின் வீட்டில் இருந்து கைத்துப்பாக்கி ஒன்றை பொலிஸார் கண்டுபிடித்ததை அடுத்தே அவர் உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார்.

No comments

Powered by Blogger.