Header Ads



டுபாயில் வானிலிருந்து, பணம் கொட்டியது..!

டுபாய் நகரின் பரபரப்பான வீதியில் வானத்தில் இருந்து பணம் கொட் டியதால் அதனை பொறுக்க பலரும் முயன்றுள்ளனர். இதனால் அங்கு வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. பலத்த காற்று காரணமாக இந்த பணம் அடித்து வர ப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது.

ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஆயிரக்கணக்கான 500 டிர்ஹம் நாணயத் தால்கள் வீதிகளில் கொட்டிக் கிடந் துள்ளன. இம்மாத ஆரம்பத்தில் நிகழ்ந்துள்ள இந்த சம்பவத்தில் குறித்த பணங்கள் எங்கிருந்து வந்தது என் பது குறித்து அதிகாரிகள் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

இதன்போது வாகன ஓட்டுனர்கள் பல ரும் தமது வண்டிகளை நிறுத்திவிட்டு நாணயத்தால்களை பொறுக்க ஆரம்பித்துள்ளனர். இந்த நாணயங்களின் மொத் தப் பெறுமதி 2 அல்லது 3 மில்லியன் டிர்ஹம்களாக இருக்கலாம் என்று கணி க்கப்பட்டுள்ளது. டுபாயின் ஜ{மைராஹ் பகுதியில் கடும் காற்று அடித்துக்கொ ண்டிருந்த வேளையிலேயே இந்த நாண யங்கள் வானிலிருந்து கொட்டியுள்ளன. ஆனால் இந்த பணம் எங்கிருந்து வந் தது என்பது குறித்து மக்களுக்கும் தெரி யாதிருந்தது. அது ஒரு பண மழையாக இருந்தது" என்று சம்பவத்தை படம்பிடித்த ஒருவர் விபரித்துள்ளார்.


No comments

Powered by Blogger.