தனியார் துறையினருக்கு சம்பளத்தை உயர்த்து, இல்லையேல் போராட்டம் - ஜே.வி.பி. எச்சரிக்கை
தனியார்துறை ஊழியர்களின் சம்பளங்களை அதிகரித்துக் கொள்ள போராட்டம் நடத்தப்படும் என ஜே.வி.பி கட்சி அறிவித்துள்ளது.
இடைக்கால வரவு செலவுத்திட்டத்தில் பரிந்துரை செய்ததற்கு அமைய தனியார்துறை ஊழியர்களின் சம்பளங்கள் 2500 ரூபாவினால் உயர்த்தப்பட வேண்டுமென ஜே.வி.பி.யின் மாகாணசபை உறுப்பினர் கே.டி. லால்காந்த கோரிக்கை விடுத்துள்ளார்.
அரசாங்க ஊழியர்களின் சம்பள அதிகரிப்பிற்கு நிகராக தனியார்துறை ஊழியர்களின் சம்பள உயர்வினை சட்டமாக்குமாறு நிதி அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
2005ம் ஆண்டு 36ம் இலக்க திருத்தச் சட்டத்திற்கு அமைய தனியார்துறை ஊழியர்களுக்கு 1000 ரூபா கொடுப்பனவு உயர்த்தப்பட்டது.
இதில் திருத்தங்களைச் செய்து 2500 ரூபா சம்பளத்தை தனியார்துறை ஊழியர்களுக்கு உயர்த்த முடியும் என லால்காந்த தெரிவித்துள்ளார்.
சம்பள உயர்வு தொடர்பில் நிதி அமைச்சருக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
போராட்டங்களை முன்னெடுத்தேனும் தனியார்துறை ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment