Header Ads



சவுதி அரேபிய வரலாற்று ஆசிரியர் தெரிவித்த கருத்தினால் சர்ச்சை (வீடியோ)

அமெரிக்க பெண்கள் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டாலும் அவர்கள் அது தொடர்பில் பெரிதாக அக்கறை கொள்வதில்லையென சவுதி அரேபியாவைச் சேர்ந்த வரலாற்று ஆசிரியர் ஒருவர் தெரிவித்த கருத்தானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சாலே அல்- சாடூன் என்ற வரலாற்று ஆசிரியர் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றின் போதே இக்கருத்தை வெளியிட்டுள்ளார்.

சவுதியில் பெண்கள் வாகனம் செலுத்த அனுமதிக்கப்படாமைக்கும் அவர் காரணமொன்றை முன்வைத்துள்ளார் அதாவது பயணத்தின் நடுவே வாகனம் இயங்காமல் போகும் பட்சத்தில் அவர்கள் வல்லுறவுக்குட்படுத்தப்படலாம் என சாலே அல்- சாடூன் தெரிவித்துள்ளார்.

இதன்போது அமெரிக்க பெண்கள் வாகனம் செலுத்துவது தொடர்பில் கேட்கப்பட்டமைக்கு அவர்கள் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டாலும் அது தொடர்பில் அக்கறை கொள்வதில்லையெனவும் பாலியல் ரீதியான வன்முறைகள் அவர்களுக்கு பெரிய விடயமல்லவெனவும் அல்- சாடூன் தெரிவித்துள்ளார்.

7 comments:

  1. உண்மை தானே. அவர்களிடம் கலாச்சாரம் என்று ஒன்றும் இல்லையே. (அ)நாகரீகம் தானே அவர்களை ஆழுகிறது.

    ReplyDelete
  2. 100percent true well done

    ReplyDelete
  3. Illogical reason for denial wemen driving cars

    ReplyDelete
  4. Jiff ur the clever of next year

    ReplyDelete
  5. அதுசரி, உங்களுடைய பெண்கள் மட்டும்தான் பெண்கள்! மற்றவர்களின் பெண்கள் எல்லாம் மண்களா.. வரலாற்றாசிரியரே..?

    அமெரிக்கப் பெண்களில் கணிசமானோர் அவர்களது கலாசாரப்படி வாழ்வதற்காக அவர்களை யாரும் வல்லுறவுக்குட்படுத்தலாம் என்பதுதான் உங்களது மறைமுகமான கருத்தா திரு. அல்சாடூன்?

    இதை ஆதரித்து பின்னூட்டமிட்டிருக்கும் நண்பர்களே ..?

    ஒரு பெண்ணை அவள் பாலியல் தொழிலாளியாகவே இருந்தாலும் அவளுடைய அனுமதியின்றி உறவுகொள்வதற்கு எவருக்கும் தார்மீக உரிமையோ அனுமதியோ இல்லை என்பதெல்லாம் உங்களுக்குத் தெரியுமா?

    உங்களுக்குப் புரிந்தாலும், தொண்டு கிழங்கள் பத்துக்கு மேற்பட்ட சிறுமிகளை மனைவிகளாக்கி வாழும் நவீன உலகின் படித்த காட்டுமிராண்டிகளாகிய திரு. அல்சாடூன் போன்றவர்களுக்குப் புரியாது.

    அமெரிக்காவை விடுங்கள் திரு. அல்சாடூன், அடுத்தவர்களின் கலாசாரத்தை விமர்சிக்கும் நீங்கள் கூறுங்கள். தனியாகச் செல்லும் உங்கள் பெண்களின் வாகனம் பழுதாகிவிட்டால் அவள் வல்லுறவுக்குள்ளாக்கப்படும் விதமாக இஸ்லாமிய ஆட்சியுள்ள உங்கள் நாட்டையும் ஆண்களையும் வைத்திருப்பது -கொள்கையளவில்- யாருடைய தவறு?

    ReplyDelete
  6. Jesly I don't wether ur muslim or not? Most women raped because of their dress. If you think deeply you will find the reality of his statement

    ReplyDelete
  7. Hi Jesly,
    முதலில் இச் செய்தியின் கரு என்ன என்பதை புரிந்து கொண்டு பின்னூட்டம் எழுத வேண்டும். பெண்களை ஏன் வாகனம் ஓட்ட அனுமதிப்பதில்லை என்பதற்கான காரணங்கள் பற்றி குறிப்பிடும்போது, நீண்ட தூர பயணம் ஒன்றின் இடைநடுவில் வாகனம் பழுதடைந்து தனியாக ஒரு பெண் மாட்டிக் கொண்டால், அங்கு அப்பெண் வல்லுறவுக்குள்ளாக்கப் படும் சாத்தியம் அதிகமுண்டு, அவ்வாறு நிகழ்ந்து விட்டால் அதன் தாக்கம் உளரீதியிலும், சமய, சமூக கலாச்சார ரீதியிலும் எத்தகைய விளைவை ஏற்படுத்தும் என்று குறிப்பிடுகிறார், அப்போது ஒருங்கிணைப்பாளர் “மேலைநாட்டில் பெண்கள் நீண்ட தூர பயணத்தில் வாகனம் செலுத்துகின்றனரே” என்ற வினாவுக்கு பதிலளிக்கும் போது “அப்படி நடந்தாலும் அப்பெண்கள் மனரீதியாக அதனை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை” என்று கூறினார் அது தானே அங்குள்ள இன்றைய படித்த யதார்த்தம்.
    தான் வல்லுறவுக்குள்ளாக்கப் பட்டதற்காக மேலை நாடுகளில் தற்கொலை செய்த பெண்கள் உண்டா, அல்லது அதையே நினைத்து இடிந்துபோய் மூலையில் உட்கார்ந்த பெண்கள் உண்டா? மாறாக கீழை நாடுகளில் அப்படி நடந்தால் அந்த நிகழ்வை விட்டு அவர்களால் அத்தனை இலகுவாக வெளிவர முடியுமா? இப்படி நடந்து விட்டதற்காக தற்கொலை செய்து கொண்டவர்கள் எத்தனை பேர்? மனநோய்க்குள்ளானவர்கள் எத்தனை பேர்? இந்த யாதார்த்ததைதான் அவர் “மேலைநாட்டு பெண்கள் மனரீதியாக அதனை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை” என்று குறிப்பிட்டார், அன்றியும் “பெண்கள் ராணிகள் அவர்களுக்கு சாரதியாக (வாகன ஓட்டுனராக) அவர்களின் தந்தை, சகோதரர்கள், கணவன், மகன், சித்தப்பா பெரியப்பா என்று எத்தையோ பேர் சேவை செய்ய காத்திருக்க ராணி ஏன் வாகனம் செலுத்த வேண்டும்?” என்று அவர் விடை கொடுத்தார். --- தயவுசெய்து காணொளியை பாருங்கள்---
    இஸ்லாம் என்பது குற்றம் நிகழ்வதற்கான காரணிகளை மட்டுமல்ல, சந்தர்ப்பங்களையும் தவிர்த்து விடுகின்றது. பெண்கள் எவ்வாறு உடையணிய வேண்டும் என்று கூறும் அதே வேளை, தனியான பயணம் செய்ய வேண்டாம், அந்நிய (திருமணம் முடிக்க ஆகுமான) ஆண்களுடன் தனித்திருக்க வேண்டாம் என்றும் கட்டளையிட்டு குற்றம் நிகழ்வதற்கான காரணிகளையும் களைந்து விடுகின்றது இவ்வாறு ஒழக்கத்தை சொல்லிக் கொடுத்து காரணிகளை நீக்கிவிட்ட பின்பும் குற்றம் செய்யும் போது அதன் தண்டனையும் கடுமையானதாக வைத்துள்ளது.
    அதை விடுத்து “வல்லுறவுக்குள்ளாக்கப்படும் விதமாக இஸ்லாமிய ஆட்சியுள்ள நாட்டையும் ஆண்களையும் வைத்திருப்பது கொள்கையளவில் – யாருடைய தவறு?” என்று கேட்பதானது தேவையற்ற வினாவாக தோன்றுகிறது. அவர்கள் தவறு நடப்பதற்கு முன்னதான காரணிகளையும் களைந்து விட்டனர். வீதியில் பெண்ணை நிர்வாணாமாக நடமாட அனுமதித்து விட்டு அதன் பின் அவளைத் தொட்டான், தொடர்ந்தான் என்பதில் பயனில்லை. பெண் வல்லுறவுக்கு உள்ளாக்கப் படுவதென்பது இஸ்லாமிய ஆட்சியுள்ள நாடு மட்டுமல்ல எல்லா நாட்டிலும் நிகழும், ஒரு பெண் தனியாக மாட்டிக்கொண்டால்.
    மேலும் “ பத்துக்கு மேற்பட்ட சிறுமிகளை மனைவிகளாக்கி வாழும் நவீன உலகின் காட்டுமிராண்டிகளாகிய” எங்கிருந்து இந்த தரவுகளைப் பெற்றுக் கொண்டீர்கள் என்பது தெரியாது. ஒருநாட்டிலோ, ஒரு சமூகத்திலோ ஒருவர் செய்யும் தவறை வைத்து முழு நாட்டையும், சமுகத்தையும் குறை கூறுவது தவறு. அப்படிப் பார்த்தால் இங்கு நம் நாட்டில் முஸ்லிம் வாலிபன் குழந்தைகளை வல்லுறவுக்குட் படுத்தினான் என்பதற்காக முழு முஸ்லிம் சமுத்தையோ வாளிபர்களையோ குற்றம் சுமத்துவது முறையல்ல. “ ஆத்திரத்தோடு பார்க்காதே நிரபராதியும் குற்றவாளியாகத் தெரிவான், அனுதாபத்தோடு பார்க்காதே குற்றவாளியும் நிரபராதியாய் தெரிவான். முடிந்தால் நடுநிலைமைலியிருந்து நோக்கு இல்லையேல் விட்டு விடு

    ReplyDelete

Powered by Blogger.