கட்டாருக்கு தொழிலுக்காக செல்ல இருந்தவர்களுக்கு தடை - பாதிக்கப்பட்டோர் ஜனாதிபதிக்கு மகஜர்
கட்டார் நாட்டில் இருக்கும் தமது உறவினர்கள், நண்பர்கள் மூலம் இலங்கையில் வசிக்கும் இலஞ்சர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் தொழில் விசாக்கள் மாதம் ஒன்றுக்கு 5000ம் வரை கிடைப்பதாகவும், இதனால் இலங்கைக்கு அந்நிய செலாவணி அதிகரிப்பதாகவும் பாரிய தொழில் பிரச்சினை தீர்க்கப் படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விசாக்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மூலம் காப்புறுதி கட்டணம் அறவிடப்பட்டு வெளிநாடு செல்ல அனுமதி வழங்கப்பட்டதாகவும் தற்போது அனுமதி இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்டோர் தெரிவிக்கின்றனர்.
சில வெளிநாட்டு முகவர் நிலையங்களின் சுய இலாபத்திற்காக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியக அதிகாரிகளை தவறாக வழி நடாத்தியதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் நாட்டிற்கும் மக்களுக்கும் ஏற்பட்டுள்ள நஷ்டம் குறித்து பாதிக்கப்பட்டோர் ஜனாதிபதிக்கு தமது மகஜரில் தெளிவாக குறிப்பிட்டுள்ளனர்.
Mohamed Maufeer
Post a Comment