மடவளையில் நாய்த் தொல்லை அதிகரிப்பு - மக்கள் விசனம்
(JM.Hafeez)
கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த மடவளை பிரதேசத்தில் விசர்நாய்த் தொல்லை அதிகரித்துள்ளாகப் பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த வாரத்தில் மட்டும் மடவளைப்பிரதேசத்தைச் சேர்ந்த பத்திற்கும் மேற்பட்டோர் நாய்க்கடித் தொல்லைக்கு ஆளாகி சிகிட்சை பெற்றதாகத் தெரிய வருகிறது.
சிறுவர்கள் மட்டுமல்லாது பெரியவர்ளும் கூட இதனால் பாதிப்படைந்துள்ளனர். இரவு வேளைகளில் வெளியில் நடமாடுவதற்குப் பெரியர்கள் கூட அஞ்சுவதாகத் தெரிவிக்கப் படுகிறது. நடுத்தர வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் அண்மையில் நாய்கடி காரணமாக கடுமையாகப் பாதிப்பட்டு வைத்திய சாலை அனுமதிக்கப்பட்டு சிகிட்சை அளிக்கப்பட்டது. சுமார் 4 அங்குல நீளத்திற்கு முகத்தில் தையல் போடப்பட்டு தற்போது குணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சிறுவர்கள் பொல்லும் தடியுமாகப் பாதையில் நடமாடுவதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். சிறுவர்களது தடிகளைக் கண்டதும் விசர் பிடிக்காத நாய்கள் கூட பயந்து ஓடுவதனால் அது விசர்நாயப்பிரச்சினையை மேலும் தீவிரப் படுத்தி வருவதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுத்து கட்டாக்காலி நாய்த் தொல்லைகளையும் விசர்நாய்க்கடித் தொல்லையையும் நிவர்த்திக்குமாறு வேண்டுகின்றனர்.
Post a Comment