Header Ads



தீவிரவாத தடுப்பு சட்டம் பாய்ந்தது - மாலத்தீவு முன்னாள் ஜனாதிபதி கைது

மாலத்தீவின் முன்னாள் அதிபரும் தற்போதைய எதிர்கட்சித் தலைவருமான முகமது நஷீத்தை தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் இன்று கைது செய்தனர். மாலத்தீவின் அதிபராக முகமது நஷீத் இருந்தபோது, அந்நாட்டின் மூத்த நீதிபதி அப்துல்லா முகமதை கைது செய்ய உத்தரவிட்டார்.

இந்த விவகாரத்தையடுத்து அங்கு எதிர்க்கட்சியினர் தொடர் போராட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து நஷீத் பதவி விலகினார். பின்னர் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற யாமீன் அப்துல் கய்யூம் புதிய அதிபராக பொறுப்பேற்றார். முன்னாள் அதிபரான முகமது நஷீத் தற்போது எதிர்கட்சித் தலைவராக செயலாற்றி வருகிறார்.

இந்நிலையில், முகமது நஷீதை தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் மாலத்தீவு போலீசார் இன்று கைது செய்துள்ளனர். நீதிபதியை கைது செய்த குற்றத்திற்காக இந்தக் கைது நடவடிக்கை என தெரிவித்துள்ள போலீசார், இந்த கைதுக்கு தீவிரவாத தடுப்பு சட்டத்தை ஏன் பயன்படுத்தினார்கள் என்பது புரியாத புதிராக உள்ளது.

No comments

Powered by Blogger.