Header Ads



ரவூப் ஹக்கீமுக்கு எதிரான ஹர்த்தால் புஷ்வானமாகியது


-பா.சிகான்-

அம்பாறை  மாவட்டத்தில் இன்று விடுக்கப்பட்ட ஹர்த்தால் அழைப்பு மக்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பதை அவதானிக்க முடிந்தது.

கடந்த  சில தினங்களிற்கு முன்னர் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் தலைமை அம்பாறை மக்களை காலாகாலமாக புறக்கணித்து வருவதாக குறிப்பிட்டு உரிமை கோரப்படாது துண்டுப்பிரசுரம் இம் மாவட்டத்தின் முஸ்லீம் மக்கள் செறிந்து வாழும் பகுதியில் விநியோகிக்கப்பட்டிருந்தது. 

ஆனால் தற்போது  வழமை போன்று சகல முஸ்லீம்கள் செறிந்து வாழும் கல்முனை சம்மாந்துறை, அக்கரைபற்று உள்ளிட்ட இடங்களில் வழமை போன்று கடைகள், சந்தைகள் வங்கிகள் என்பன இயங்கியதுடன் மக்களும் அன்றாட நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இது தவிர முஸ்லீம் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் பலரும் இக்ஹர்த்தால் அனுஸ்டிப்பை மேற்கொள்ளாது தவிர்ந்து கொள்ளுமாறு மக்களை ஊடகங்கள் மூலமாகவும் பல தொடர்புகளின் ஊடாகவும் வேண்டிக்கொண்டனர்.

No comments

Powered by Blogger.