Header Ads



ஐக்கிய தேசிய கட்சியும், முஸ்லிம் காங்கிரஸும் புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு வந்துவிட்டன - ரவூப் ஹக்கீம்

 -tw-

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமது கட்சி, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடவுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

கண்டியில் இன்று 09-02-2015 இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் இதனைக்குறிப்பிட்டார்.

இது தொடர்பில் ஏற்கனவே இரண்டு கட்சிகளுக்கும் இடையில் இணக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னரே இது தொடர்பில் இரண்டு கட்சிகளும் புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு வந்துவிட்டதாக ஹக்கீம் தெரிவித்தார்.

இந்தநிலையில் பொதுத்தேர்தலின் பின்னரும் தேசிய ஒற்றுமை அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்க தமது கட்சி தயார் என்றும் ஹக்கீம் கூறினார்.

1 comment:

  1. We r sick of this alliance& dalliance

    Motley combination & permutation.!

    ReplyDelete

Powered by Blogger.