Header Ads



வெலே சுதாவுக்காக வேலைசெய்த பிரித்தானியரும், பாகிஸ்தானியர்களும்..!

களனி சிங்காமுல்லையில் கண்டெடுக்கப்பட்டுள்ள 26 உழவு இயந்திரங்களும் எட்டு தடவை பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்ப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமான அஜித் ரோஹண தெரிவித்தார். 

போதைப்பொருள் கடத்தலின் முக்கிய புள்ளியான வெலேசுதா மற்றும் தற்போது வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள சித்திக் ஆகியோர் வெளிநாட்டவர்களை பயன்படுத்தியே உழவு இயந்திரத்தில் மறைத்து இலங்கைக்கு போதைப்பொருளை கடத்தியுள்ளமை போதைப்பொருள் தடுப்பு பிரிவின் விசாரணை ஊடாக தெரிய வந்துள்ளதாக பொலிஸ் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்தெரிவித்தார். 

தொடர்ந்து ஊடகங்களுக்கு எடுத்து தெரிவித்த அவர்; 

இவ்விருவரும் மிகவும் சூட்சுமமான வகையில் போதைப்பொருளை கடத்துவதற்காக வெளிநாட்டவர்களே பயன்படுத்தியுள்ளனர். அதற்கமைய பிரித்தானிய நாட்டவரான ஜெரம் டக்லஸ் என்வர் ஊடாக சட்டரீதியாக களனியில் அமையப்பெற்றிருந்த களஞ்சியசாலையை வாடகைக்கு வாங்கியுள்ளனர். அதில் சேவையாற்றுவதற்காக பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த இருவரை நாட்டிற்கு வரவழைத்து இருந்தனர். 

பிரித்தானியர் நட்சத்திர ஹோட்டலொன்றிலே தங்கி இருந்ததுடன் ஏனைய இருவரும் சாதாரண ஹோட்டல்களில் தங்கயிருந்துள்ளனர். இம்மூன்று சந்தேக நபர்களும் 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் பல தடவைகள் இலங்கைக்கு வந்து சென்றுள்ளனர். இவர்கள் உழவு இயந்திரங்களின் போதைப்பொருளுக்கு என்ன நடந்தது? எப்படிகொண்டு வரப்பட்டுள்ளது என்பது தொடர்பில் அரச பகுப்பாய்வு அறிக்கை கிடைக்கப்பெற்றவுடன் கண்டறியப்படவேண்டுமென பொலிஸ் ஊடகப்பேச்சாளர்தெரிவித்தார்.  -

No comments

Powered by Blogger.