ஹசன் அலியின் கவனத்திற்கு..!
ஹசன் அலி அமைச்சர் அவர்களே நீங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் பொத்துவில் தொகுதியிலும் உங்களது கிராமத்துக்கு அன்மயில் காணப்படுகின்றதுமான அரசியல் அனாதைக் கிராமமே எங்களது மாவடிப்பள்ளிக் கிராமமாகும்.
இக்கிராமத்தில் அமைந்து காணப்பட்ட சனசமூக நிலையத்தை மாவடிப்பள்ளிக் கிராமம் நிந்தவூர் பிரதேச சபையூடன் இணைந்து இருக்கும் போது அதே கட்டிடத்தில் பொதுநூலகமாக தரம் உயர்த்தப்பட்டு நீண்ட காலமாக புத்தகம்களும் பொதுநூலகத்துக்கான கட்டிடமும் இன்மயினால் எங்களது கிராமத்து மாணவர்கள் பல இன்னல்களுக்கு மத்தியில் அயற்கிராமங்களுக்குச் சென்று அங்குள்ள பொது நூலகங்களைப் பயன்படுத்தி வந்தனர் என்பதை தாங்கள் அறிவீர்கள் என்று நினைக்கின்றேன்.
தற்போது 2013ஆம் ஆண்டு அம்பாரை மாவட்டத்தில் இடம்பெற்ற தேசத்துக்கு மகுடம் “தயட்ட கிருள” அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் மாவடிப்பள்ளி பொது நூலகக் கட்டிடத்துக்காக நிதி ஒதுக்கப்பட்டு தற்போது அதன் அனைத்து வேலைகளும் பூர்த்திசெய்யப்பட்டு தளபாட வசதிகள் இன்மயினால் பொது நூலகத்துக்கான அந்தக்கட்டிடத்தில் நூலகத்தை இயங்கச் செய்வதில் பெரும்இடர்பாடு காணப்படுகின்றது என்பதனை தங்களது மேலான கவனத்துக்குக் கொண்டுவருகின்றேன்.
ஆகவே உங்களது நேசக்கிராமமாகிய இக்கிராமத்துக்கு நீங்கள் நேரடியாக விஐயம் செய்து பொது நூலகத்துக்கான தளபாட வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து எங்களது கிராம மாணவர்களினது பெரும் தேவையை நிவர்த்தி செய்ங்கள் என்று அரசியல் அனாதைக் கிராமமாகிய மாவடிப்பள்ளி மக்கள் சார்பாக வேண்டுகின்றேன்
கட்டாரில் இருந்து
எஸ்.எம். இஹ்சான் (மாவடி)
Post a Comment