சம்மாந்துறையில் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை, உறுதிப்படுத்த இஸ்மாயில் களமிறங்குவாரா..?
-எம்.வை.அமீர்-
சுமார் 80000 வாக்காளர்களை அதிலும் 57000 க்கு மேற்பட்ட முஸ்லிம் வாக்காளர்களைக் கொண்ட சம்மாந்துறை தொகுதி, கடந்த பலவருடங்களாக பாராளமன்ற பிரத்தி நிதித்துவத்தை இழந்து வருவதால் ஏற்பட்டுள்ள பின்னடைவை நிவர்த்திக்கும் முகமாக, எதிர்காலத்தில் இடம்பெறவுள்ள பொதுத்தேர்தலின் போது சம்மாந்துறைக்கு பாராளமன்ற உறுப்பினரை பெறுவது தொடர்பான உத்திகளைக் கண்டறியும் நோக்குடன், ‘சம்மாந்துறை வசந்தம்’ என்ற அமைப்பினால் சம்மாந்துறையைச் சேர்ந்த புத்திஜீவிகளுடனான சந்திப்பு ஒன்று 2015-02-07 ம் திகதி சம்மாந்துறை விளையாட்டு கட்டிடத்தொகுதியின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
சம்மாந்துறை வசந்தம் எனும் அமைப்பின் தலைவர் என்.மஹ்றுப் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபைத் செயலாளர் எஸ்.ஏ. ராசிக் மற்றும் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறைத்தலைவர் றமீஸ் அப்துல்லாஹ் உட்பட பெரும் திரளான சம்மாந்துறையைச் சேர்ந்த புத்திஜீவிகள் கலந்து அவராவது கருத்துக்களை முன்வைத்தனர்.
சுதந்திரத்துக்கு முற்பட்ட நீண்டகால வரலாற்றைக் கொண்ட சம்மாந்துறை இற்றைக்கு அண்மித்த காலத்திலேயே பட்டினசபை அந்தஸ்த்தை பெற்றிருந்த போதிலும் இடைப்பட்ட கால ஆட்சியாளர்களால் பிரதேசசபை என்ற நிலைக்கு மாற்றப்பட்டதாகவும் வேகம்பற்று என்ற பெயருடன் மிகவிசாலமான நிலப்பரப்புடன் காணப்பட்ட சம்மாந்துறை காலப்போக்கில் சுருக்கப்பட்டுள்ளதாகவும் விவசாயத்தை பெருவாரியாக நம்பிவாழும் சம்மாந்துறை மக்களின் தொழித்துறையில் பெரிதாக முன்னேற்றம் காண முடிய வில்லை என்றும் கல்வி மற்றும் உட்கட்டமிப்பு வேலைவாய்ப்பு போன்ற சகல துறைகளிலும் பின்னிலையில் இருப்பதாகவும் இவ்வாறான நிலையை நிவர்த்திப்பது என்றால் எதிர்வதும் தேர்தலில் பாராளமன்ற உறுப்பினரை சம்மாந்துறை பெற்றே ஆக வேண்டும் என இங்கு வலியுறுத்தப்பட்டது.
சம்மாந்துறையில் பாராளமன்றம் செல்லக்கூடிய தகுதியுள்ளவர்களை ஊர்கூடித் தீர்மானிப்பதர்க்கு இங்குள்ள அதி உச்ச சபையான சமய உச்ச சபைகள் முன்வரவேண்டும் என்று கேட்கப்பட்டது.
தற்போதுள்ள நிலையில் சம்மாந்துறைக்கான சிறந்த தெரிவாக தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.இஸ்மாயில் அவர்களது பெயர் இச்சபையில் முன்மொழியப்பட்டது. உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.இஸ்மாயில் அவர்கள் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கும் சம்மாந்துறைக்கும் செய்துள்ள சேவைகள் பற்றி இங்கு பிரஸ்தாபிக்கப்பட்டது. சம்மாந்துறையை வழிநடத்துவது என்றால் உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.இஸ்மாயில் அவர்களைப் போன்றவர்கள் முன்வரவேண்டும் என்றும் இங்கு கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
சம்மாந்துறைக்கான பாராளமன்ற உறுப்பினரை பெறுவதற்காக உண்டான தேவைகளை வலியுத்தும் தீர்மானங்களை இங்குள்ள உயர் சபைகளுடனும் எதிர்காலத்தில் மக்களுடனும் கலந்துரையாடி சிறந்த முடியுகளை எட்டுவது எனவும், பிரதான அரசியல் கட்சிகளுடன் உரையாடுவது எனவும் முடியாது போகும் பட்சத்தில் சுயதினக் குழுவை நிறுத்தியாவது பள்ளிவாசல்களின் அனுமதியுடன் பாராளமன்ற உறுப்பினரை பெறுவது என்ற தீர்மானம் மேட்கொள்ளப்பட்டது.
Insha Allah, I hope Dr. Ismail, will be a good leader, we pray Allah for his success.
ReplyDeleteஇது சாத்தியம் அற்ற விடயம்.
ReplyDelete