Header Ads



நான் இஸ்லாமியன் என்பதால், சிலர் என்னை விமர்சிக்கின்றனர் - றிசாத் பதியுதீன்


-    முல்லைத்தீவிலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா -

20 வருடத்துக்கு மேலாக செயலற்று போயுள்ள ஒட்டுச் சுட்டான் ஓட்டுத் தொழிற்சாலையினை மீள இயங்க வைத்து இதன் மூலம் பிரதேசத்தின் இளைஞர்,யுவதிகளுக்கு புதிய தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்தி கொடுக்கும் வேலைத்திட்டம் இன்னும் சில வாரங்களில் ஆரம்பிக்கப்படும் என கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்துக்கு  விஜயம் செய்த அமைச்சருக்கு இப்பிரதேச மக்கள் பெரும் வரவேற்பு நிகழ்வொன்றினை ஏற்பாடு செய்திருந்தனர். அதனையடுத்து முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்ற மக்கள் சந்திப்பின் போது அமைச்சர் றிசாத் பதியுதீன் மேலும் கூறுகையில் -

வன்னி மாவட்ட மக்கள் எனக்கு வழங்கிய வாக்குகளால் இன்று மக்கள் நலன் பணிகளை செய்யக் கூடியதாக உள்ளது.கடந்த அரசாங்கத்தில் தான் வகித்த பதவியினை கொண்டு இந்த மக்களின் எத்தனையோ அபிவிருத்தி னது பணிகளை செய்து கொடுத்துள்ளேன்.நான் பிறப்பில் இஸ்லாமியனாக இருக்கின்றேன் என்பதால என்னை ஏனைய சமூகத்தினை சார்ந்த சிலர் வித்தியாசமாக பார்த்து விமர்சிக்கின்றனர்.நான் பிறந்த எனது தேசம் இலங்கை இங்கு என்னுடைய தாய் மொழி தமிழ் என்பதை  மகிழ்ச்சியுடன் கூறிக் கொள்ளவிரும்புகின்றேன்.

நூங்கள் தமிழர்கள்,சிங்களவர்கள்,முஸ்லிம்கள் என்று பிளவு பட்டு எமது மாவட்டத்ததை கட்டியெழுப்ப முடியாது,ஒரு பொது எதிரியினை தோற்கடிக்கதற்கு நாம் ஒரு பொது வேட்பாளரை ஆதரித்தோம்,அதே போல் எமது மாவட்ட மக்களின் தேரைவகளை பெற்றுக் கொடுக்க முயற்சிக்கின்ற போது நாங்கள் அனைவரும் ஒன்று பட்டு செயற்படுவது காலத்தின் தேவையாகும்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் பெயரை பரைசாற்றிய தொழிற்சாலையாக ஒட்டுச் சுட்டான் ஓட்டுச் தொழிற்சாலை காணப்பட்டது.இன்று அது செயலிழந்துள்ளது. அதனை மீண்டும் நாம் உயிர்பிக்க வேண்டும்.அதற்கான பணிகள் ஆரம்பிக்கப்படும்,அதே போல் எனது அமைச்சின் கீழ்,உள்ள பணை அபிவிருத்தி சபை ஊடாக இங்கிருக்கின்றவர்களுக்கு தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்தி கொடுக்கவுள்ளேன்.

எதிர்காலத்தில் இன்னும் எத்தனையோ நல்ல பல திட்டங்களை முல்லைத்தீவு மாவட்டத்துக்கு கொண்டுவரும் திட்டங்கள் எம்மிடம்வுள்ளது.இன்றைய இந்த கூட்டத்தினை பார்க்கின்ற போது தமிழர்களும்,இஸ்லாமியர்களும் உறவோடு இருக்கின்றதை தொடர்ந்தும் தக்க வைத்துக்கொள்ள முயற்சிகளை செய்ய வேண்டும் என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் அழைப்புவிடுத்தார்.

1 comment:

  1. A "Muslim" is one who believes that Allah alone has power and will be transparent and honest.
    Is he transparent? Is he honest? Will he account for the billions he has accumulated after he entered into politics?
    Can a Muslim swindle?
    It is time for Lankan Muslims to defat the myth of "Muslim poltics"
    We,Muslims,must realise the folly of Muslim politics and the detrimental consequences we have already experience d.
    Hamid

    ReplyDelete

Powered by Blogger.