Header Ads



தற்போதைய அரசாங்கத்தின் கீழ் மண்டியிடமாட்டோம் - விமல் வீரவன்ஸ

கரும்புலிகளுக்கு விடுதலை கிடைக்கும் காலம் இது என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார். சுதந்திர தினத்தில் கரும்புலிகளுக்கு விடுதலை கிடைக்கின்றது. விடுதலை புலிகளிடம் இருந்து நாட்டை காப்பாற்ற தலைமை தாங்கி அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர்களையும் அவர்களது குடும்பங்களையும் கைது செய்து சிறையில் அடைக்கும் யுகம் ஆகும்.

அவ்வாறான மாற்றங்களே இலங்கையில் தற்பொழுது இடம்பெற்று வருகின்றது. 2011ஆம் ஆண்டில் முன்வைக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்கே நான் இன்று குற்றப்புலனாய்வு பிரிவிற்கு வந்தேன் எனவும், அதற்கமைய எனது வாக்கு மூலங்களை குறித்த அதிகாரிகளிடம் நான் முன்வைத்தேன், இருந்தாலும் என்னை மீண்டும் அழைப்பதற்கு வாய்ப்புகள் காணப்படுகினறன எனவும் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச கூறியுள்ளார்.

குற்றப்புலனாய்வு பிரிவில் வாக்குமூலம் வழங்கிவிட்டு ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தேர்தல் நடைபெற்ற காலத்தில் பேரணியொன்றை நடத்தியமை குறித்தே இன்று விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது எனவும் முன்னாள் அமைச்சர் குறிப்பிட்டார்.

எனக்கும் முறைப்பாடுகள் செய்துள்ளார்கள் எனது மனைவிக்கும் முறைப்பாடுகள் செய்துள்ளார்கள். எதிர்காலத்தில் எனது பிள்ளைகளுக்கும் முறைப்பாடுகள் செய்வார்களா என்று தெரியவில்லை என தெரிவித்த முன்னாள் அமைச்சர், 18ம் திகதி நுகேகொடையில் இடம்பெற்ற கூட்டத்திற்கு பின்னர் நல்லாட்சி அதிகாரிகள் அவநம்பிக்கையுடன் காணப்படுவதாகவே தெரிகின்றது.

நல்லாட்சி அதிகாரிகளின் இதயம் அதிகமாக துடிக்கும் சந்தர்ப்பங்களில் எங்களை இவ்வாறு அதிகமாக விசாரணைக்கு கொண்டுவர வேண்டிய அவசியமும் உள்ளது. எங்களுக்கு எதிராக சட்டத்தை பலப்படுத்த வேண்டிய அவசியமும் அதிகமாக உள்ளது. என்னையும், என் மனைவியையும் அல்லது பிள்ளைகளையும் எப்படியாவது சிக்க வைத்து எங்களது அரசியல் பயணத்தை நிறுத்துவதற்கான முயற்சியை இவர்கள் மேற்கொள்கின்றனர்.

எது எவ்வாறாயிருப்பினும் நாங்கள் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் செயற்பட மாட்டோம், மண்டியிடவும் மாட்டோம், நாங்கள் தேர்ந்தெடுத்த முறையிலே எதிர்வரும் காலங்களில் அரசியல் பயணத்தை மேற்கொள்வோம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

போலியான கடவுச்சீட்டு குறித்து குறிப்பிட்டது முற்றாக உண்மைக்கு புறம்பானது, எமது அரசியல் பயணத்தை நிறுத்துவதற்காகவே இவ்வாறான போலிக்குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர், இந்த குற்றச்சாட்டுக்கள் போலியானவை என நாம் விரைவில் நீதிமன்றத்தில் நிரூபிப்போம் என முன்னாள் அமைச்சர் கூறினார்.

2 comments:

  1. சா இவா்கள் ரொம்ப சுத்தமானவர்கள்

    ReplyDelete
  2. புலிகளின் கதையை வைத்து வியாபாரம் பண்ணிய ருசி.இனி நடக்காது தம்பி வன்ச

    ReplyDelete

Powered by Blogger.