'பிழையானவர்களுக்கு, பிழையான சமிக்ஞைகளை கொடுத்துவிடக் கூடாது' கோத்தாபய
தமிழ்நாட்டை மையமாகக் கொண்டு தமிழ் பிரிவினைவாதம் மீள தலைதூக்க இந்தியா இடமளித்துவிடக் கூடாது என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இந்திய ஊடகமொன்றுக்கு அளித்த நேர் காணலிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலத்தில் தமது அரசாங்கம் ஆட்சியில் இருந்த போது இவ்வாறு தமிழ்ப் பிரிவினைவாதம் தலைதூக்க இடமளிக்கவில்லை. தமிழ்ப் பிரிவினைவாதம் தமிழகத்திலிருந்து இலங்கைக்கு வந்த ஒன்றாகும்.
எனினும் தமிழ்ப் பிரிவினைவாதம் என்பது இலங்கையை விடவும் தமிழகத்தில் நீண்ட காலமாக நீடித்து வருகின்றது. 1980ம் ஆண்டில் தமிழ் ஆயுததாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி இந்தியா பாரிய வரலாற்று தவறிழைத்துவிட்டது.
இந்தியா மீண்டும் ஒரு தடவை பிழையானவர்களுக்கு பிழையான சமிக்ஞைகளை கொடுத்துவிடக் கூடாது. தமிழகத்தின் அரசியல் அழுத்தங்கள் காரணமாகவே ஐ.நா மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவளித்திருந்தது.
இந்தியாவுடன் இலங்கை எந்தக் காலத்திலும் சிறந்த உறவுகளையே பேணி வந்தது. சீனாவுடன் இலங்கை பேணி வரும் உறவுகளை இந்தியா தவறாக விளங்கிக்கொண்டுள்ளது என கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
You already given wrong signal to wrong sena now you are coming to advice India what a joker you are ?
ReplyDeleteWell said
ReplyDelete