Header Ads



தேர்தலில் போட்டியிடுமாறு, சந்திரிக்காவின் மகனுக்கு அழைப்பு

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் புதல்வர் விமுக்தி குமாரதுங்க எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக தெரியவருகிறது.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் போட்டியிடுமாறு விமுக்திக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளரான சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் விமுக்தி குமாரதுங்கவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள போதிலும் அவர் இதுவரை அதற்கு சாதகமான பதில் எதனையும் வழங்கவில்லை எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.