'முஸ்லிம் காங்கிரஸ் நீதிக்கு மாறாகவே முதலமைச்சரை பெற்றது, நாங்கள் இதனை விடப்போவதில்லை'
இந்த நாட்டில் முஸ்லிம் காங்கிரஸ் மத்தியில்; மைத்திரியுடனும் கிழக்கு மாகாணத்தில் மஹிந்தவுடன் ஆட்சி செய்கின்றது. இதனை நாங்கள் விடப் போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தெரிவித்தார்.
மட்டக்களப்பு செட்டிபாளையம் சிவனாலயத்தின் பவள விழாவை முன்னிட்டு ஆனந்த கிரி எனும் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது மேலும் அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில்,
தற்போது மட்டக்களப்பு மக்கள் மாத்திரமல்ல கிழக்கு மாகாண மக்கள் மிகவும் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கின்ற விடயம் கிழக்கு மாகாண சபையாகும். இது கிழக்கு மாகாண மக்களின் மிகமுக்கியமான பிரச்சினையாக காணப்படுகின்றது. மக்களெல்லாம் நம்பி இருந்தார்கள் ஆட்சி மாறிய பொழுது அந்த ஆட்சியின் மூலம் இந்த கிழக்கு மாகாண சபையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தக்கவைத்துக் கொள்ளும் என எண்ணியிருந்தனர்.
இந்த நாட்டில் ஆட்சி மாற்றத்தினை ஏன் ஏற்படத்தியிருந்தோம். இந்த நாட்டில் உண்மையில் சரியான ஆட்சியில்லை, சரியான நிருவாகம் இல்லை, இந்த நாட்டின் அரசியல், அராஜக அரசியலாக சென்று கொண்டு இருக்கின்றது, என்பதற்காக அதனை தொடர விட்டால் எமது நிலை கேள்விக்குறியாகிவிடும் என்பதற்காக சென்றமாதம் அந்த அரசாங்கத்தினை நாங்கள் வீழ்த்தியிருக்கின்றோம்.
தற்பொழுது இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற நல்லாட்சியினூடாக கடந்த கால ஆட்சியில் இடம் பெற்ற ஊழல்களை நாங்கள் அறியாமல் இல்லை. கடைசியாக கடந்த ஜனாதிபதி அலரிமாளிகையில் 500 மில்லியன் ரூபாய் பணத்தினை விட்டுச் சென்றிருந்தார். என்றால் ஒரு வீட்டிலே இவ்ளவு பணம் எவ்வாறு வைத்திருக்க முடியும் என்பதனை நீங்கள் விரைவில் புரிவீர்கள். இது மாத்திரமா? இங்கிருந்து வெளிநாட்டுக்கு கொண்டு செல்லப்பட்ட சொத்துக்களுக்கு விழக்கம் எடுக்கப்படுகின்றது. விசாரணைகள் நடைபெறப்போகின்றன, அந்தளவுக்கு மக்களின் பொருளாதாரத்தை முடக்கிய அரசாங்கத்தை நாங்கள் வீட்டுக்கு அனுப்பி இருக்கின்றோம்.
இந்த நாட்டில் புரையோடிப்போய் இருக்கின்ற இனப்பிரச்சினையை சர்வதேசத்திற்கு கொண்டு சென்றவர்கள் யார் என்பதனை நீங்கள் சிந்திக்க வேண்டும். தற்போதுகூட புதிய அரசாங்கத்தினால் இந்த விசாரணை தடைப்பட்டு விடக்கூடாது என்பதற்காக ஒரு தூதுவரை ஜெனிவாவுக்கு அனுப்பி இருக்கின்றோம். எனவேதான் இந்த நாட்டிலே தமிழருக்கு வருகின்ற அனைத்து பிரச்சினைகளையும், தட்டிக்கேட்கின்ற உரிமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மாத்திரம்தான் உண்டு.
இந்த அரசாங்கத்தினூடாக புரையோடிப் போயிருக்கும் பிரச்சினைக்கு தீர்காண எண்ணியிருக்கின்ற இந்த நேரத்திலே! கிழக்கு மாகாண சபையிலே ஒரு பிரச்சினை, கிழக்கு மாகாண சபையிலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 11 ஆசனங்களை பெற்றிருக்கின்றது. இந் நிலையில் 2012 ஆண்டு நடைபெற்ற கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் 6500 வாக்குகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்திருந்தால் நாங்கள் கிழக்கு மாகணத்தில் ஆட்சி அமைத்திருக்க முடியும். இவ்வாக்கு குறைந்ததனால் ஆட்சி அமைக்க முடியாத நிலை எமக்கு ஏற்பட்டு இருந்தது.
இதன் போது எமது சகோதர இனத்தின் உதவியை நாடினோம் பிரதம அமைச்சர் போன்ற பல பதவிகளை அந்த முஸ்லிம் காங்கரசுக்கு கொடுத்தோம், அதனை அவர்கள், ஏற்கமறுத்தார்கள். அன்றிருந்த அராஜக அரசுடன் கைகோர்த்துக் கொண்டு, ஆட்சியியை அமைத்துக் கொண்டனர். அன்றிருந்த நிலமை வேறு இன்று ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பொழுது எமக்கும் போதிய பெரும்பான்மை இல்லாத காரணத்தினால் அதே முஸ்லிம் காங்கரசுடுன் பேச்சுவார்த்தை நடாத்தி முதலமைச்சரை எங்களுக்கு தாருங்கள் எனக் கோரியிருந்தோம். அதற்கு அவர்கள் மறுத்து விட்டார்கள். அன்று நாங்கள் கிழக்கில் அமைச்சுப் பதவியினைத் தருகின்றோம் என்பதை ஏற்க மறுத்தவர்கள் தற்பொழுதும் நாங்கள் முதலமைச்சர் பதவியினைக் கேட்டபோதும் ஏற்க மறுத்துவிட்டார்கள்அவர்கள்.
மைத்திரியை ஆதரித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சி போன்ற கட்சிகளிடம், ஆதரவு கேட்டு மறுக்கப்பட தற்பொழுது மகிந்த அரசாங்கத்துடன் இருக்கின்ற கட்சியுடன் கூட்டுச்சேர்ந்து அரசாங்கத்தை அமைத்து இருக்கின்றார்கள். அதுவும் முழுமையாக இல்லை. ஆகவே முஸ்லிம் காங்கரசின் நிலைப்பாடு என்ன?
கடசியில் மைத்திரியை ஆதரித்தவர்கள், முன்பெல்லாம் மகிந்த அரசிடம் பெறக் கூடியதெல்லாம் பெற்றவர்கள் தேர்தலுக்கு இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பு மைத்திரியிடம் சேர்ந்து இன்று என்ன செய்தார்கள் மகிந்த ராஜபக்சவுக்கு அதரவு வழங்கியவுருடன் சேர்ந்து ஆட்சி அமைத்துள்ளனர். இது என்ன நிலைப்பாடு என்று கேட்கின்றோம்.
முஸ்லிம் காங்கரஸ் மத்தியிலே மைத்திரி ஆட்சி! கிழக்கு மாகாணத்திலே மகிந்த ஆட்சி! அவர்களுக்கெல்லாம் இரண்டு வாய் அமைந்திருக்கின்றதாக எண்ணத் தோன்றுகின்றது. இதனை பார்க்கும் போது வெட்கமில்லையா? இப்படியான ஆட்சி அமைப்பதனை நினைத்து அவர்கள் வெட்கி தலைகுனிய வேண்டும். அரசியல் அனுபவம் இருந்தும் இல்லாதவர்கள் போன்று மக்களை சரியாக மக்களாக மதிக்காமல் மக்களின் ஆளுமைக்கும், மக்களின் உரிமைக்கும் எதுவும் கொடுத்து விட முடியாமல் இந்த ஆட்சியை அமைத்திருக்கின்றார்கள்.
முஸ்லிம்களிலே பலபோர் கூறுகின்றனர் இந்தமுறை முதலமைச்சரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்க வேண்டும். அதுதான் நீதி என்று கூறுகின்றனர் எனவே முஸ்லிம் காணிகிரஸ் நீதிக்கு மாறாகத்தான் இந்த முதலமைச்சர் பதவியைப் பெற்றிருக்கின்றார்கள். ஆனால் நாங்கள் இதனை விடப்போவதில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.
Podum appa unga inavatham
ReplyDeleteஐயா நாங்கள் நாங்களாகவே இருந்தோம் என்பதற்கு மறைந்த தமிழ் தலைவர்கள் சான்று.ஆனால் நீங்கள் மாறியபின் நாங்கள் என்னதான் செய்ய?.ஒருவேளை நீங்கள் கூறியதை வைத்து அன்று த.தே.கூ வினருடன் இணைந்து ஆட்சியும் அமைத்திருந்தால் வேதாளம் ஏறியிருக்கும்.அதாவது வடமாகாண சபைக்கான தேர்தல் இடம்பெற்றிருக்குமா? அத்தோடு சேர்ந்து கி.மாகாண சபையும் கலைக்கப்படாமல் இருந்திருக்குமா? ஆக முஸ்லீம் காங்கிரஸ் செய்தது சரியானாதேயாகும்.
ReplyDeleteஇப்பொழுது முஸ்லீம்கள் ஒரு விடயத்தை உணர்ந்துள்ளார்கள் முஸ்லிம்கள் பெரும்பாண்மையாக உள்ள கி.மாகாண சபைக்கு இனி முஸ்லீம்கள்தான் முதலமைச்சர் .கடந்த காலத்தில் வந்த குதிரை கழுதை மயில் யானை எல்லாம் இனி வாராது.