Header Ads



பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவீர்களா..? மஹிந்த வழங்கிய பதில் (வீடியோ இணைப்பு)

சிறந்த நிர்வாகத்துடனான அரசாங்கத்தின் கீழ் சட்டத்தை துரிதமாக செயற்படுத்த வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

விளக்கமறியலில் தடுத்துவைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜயசேகரவின் நலன்களை அறியும் பொருட்டு முன்னாள் ஜனாதிபதி ரத்தினபுரி குருவிட்ட சிறைச்சாலைக்கு இன்று சென்றிருந்தார்.

இதன்போது அங்கு கூடியிருந்த பொதுமக்களும், ஊடகவியலாளர்களும் முன்னாள் ஜனாதிபதியிடம், அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிடுவீர்களா என கேள்வியெழுப்பியிருந்தனர்.

நான் முன்னாள் அமைச்சரின் நலன்கள் பற்றி ஆராயச் சென்றிருந்ததேன்.

காலந்தாழ்த்திய கேள்விகளை கேட்காதீர்கள்.

நாடாளுமன்ற உறுப்பினருக்கு விரைவில் நீதி கிடைக்கும் என நம்புகிறேன். பிணை அனுமதி கிடைக்கலாம். சிறந்த அரசாங்கத்தின் கீழ் சட்டம் விரைவாக செயற்படுத்தப்படும் என எதிர்பார்க்கின்றேன்.

அதனை வழங்காமல் இருப்பதற்கு காரணம் எதுவும் இல்லை.

இதன்போது அங்கு கூடியிருந்த பொதுமக்களில் சிலர், தாம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்கு வருவதை எதிர்பார்த்திருப்பதாக தெரிவித்தனர்.

அதற்கு அவர் நகைப்புடன் அங்கிருந்து வெளியேறினார்.

No comments

Powered by Blogger.