Header Ads



பாவப்பட்ட பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவை செயற்பட அனுமதித்தது ஏன்...? டிலான் பெரேரா விளக்கம்

100 நாள் பிரதமர் பதவி ரணிலுக்கு பாவம் பார்த்து வழங்கப்பட்டது என பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

வார இறுதி பத்திரிகை ஒன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

100 நாள் வேலைத்திட்டத்தினை வாக்குறுதிக்கமையை நடைமுறைபடுத்த வேண்டும். பிரதமர் ரணில் விக்ரமசிங்க 100நாள் வேலை திட்டத்தின் ஒரு நுனியை மாத்திரம் பிடித்துக்கொண்டு முன்னோக்கி செல்ல முடியாது.

48 பாராளுமன்ற உறுப்பினர்களை வைத்துக்கொண்டு ரணிலை பிரதமராக செயற்பட அனுமதித்தது 100 நாள் வேலை திட்டத்திற்கு ஆதரவு வழங்கியே ஆகும்.

பாவப்பட்ட பிரதமராக ரணில் செயற்படுவதற்கு அனுமதித்தது நிறைவேற்று அதிகாரம் ஒழிக்கப்படும் மற்றும் தேர்தல் முறைமையை மாற்றுவதாக தெரிவித்ததனாலேயே ஆகும்.

மக்களுக்களித்த வாக்குறுதியை போன்று மாற்றம் நிகழவில்லை என்றால் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஆதரவு அவருக்கு கிடைக்காது எனவும் பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா மேலும் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. உங்களைப்பார்க்கும் போதுதான் பாவமாக இருக்கின்றது !

    ReplyDelete

Powered by Blogger.